என்னைப்பற்றி

அஜயன் பாலா

எழுத்தாளர்,  இயக்குனர் …

விரைவில் வெளியாகவிருக்கும் ஆறு அத்தியாயம் திரைப்படம் மூலம் இயக்குனராக  அறிமுகம்

வசன எழுத்தாளராக  வனயுத்தம், சென்னையில் ஒருநாள், உதயநிதி ஸ்டாலின்  நடித்த மனிதன் போன்ற படங்களுக்கு      பணி புரிந்துளார்.

மதராசபட்டினம் , தெய்வ திருமகள், தலைவா, தாண்டவம்,  வேட்டை உள்ளிட்ட பல திரைக்கதை ஒழுங்கமைப்பாளராக பணி புரிந்தவரான இவர்

சித்திரம் பேசுதடி,மதராசபட்டினம், தென்மேற்கு பருவக்காற்று,  , வால்மீகி  கிருஷ்ணவேணி பஞ்சாலை, வனமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் பங்களித்துள்ளார்.

1994-ல் முதல் சிறுகதை விருட்சம் இதழில்  எழுத துவங்கியவர் .

1999-ல் வெளியான பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை மொழிபெயர்ப்பு நூல் தான் இவரது முதல் புத்தகம்  

2004-  மயில்வானன் மற்றும் கதைகள் முதல் சிறுகதைத்தொகுப்பு .  

2007 முதல் 2009-ஆம்  ஆண்டு வரை  ஆனந்த விகடனில்  இவர் எழுதிய  நாயகன் தொடர் வழி   பெரியார்  அம்பேத்கார்,  உள்ளிட்ட பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எளிய மக்களுக்கு கொண்டு சென்றத.தன் மூலம் ஊடகம் மற்றும் வெகுஜன மக்களிடம் பரவலான கவனம் பெற்றார்

இலக்கியம், சினிமா ,அரசியல், பயணம் மற்றும் மொழி பெயர்ப்பு ,என பல்வேறு தளங்களில் இதுவரை 25க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்

உலக சினிமா வரலாறு தொகுப்பு நூல்கள் , 100 தமிழ் அறிஞர் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து உருவாக்கம் கொண்ட செம்மொழி சிற்பிகள் ஆகியவற்றை தன் எழுத்து பயணத்தில் சாதனையாக கருதுகிறார்

2002 –ஆம் ஆண்டு அக்டோபர் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிலம்பு என்ற பெயரில் தமிழின் முதல் குறும்பட மற்றும் ஆவணப்பட விழா நடத்தியதை முக்கிய களப்பணியாக கருதுபவர்

 சங்கம், சொற்கப்பல் என இலக்கியத்திற்கான அமைப்பு மூலம் பல்வேறு சிறுபத்திரிக்கை கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்தவர்.

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது குழுவின் ஒருங்கிணைப்பாளர்.

நாதன் பதிப்பகம் மூலம் சிறந்த நூல்களை பதிப்பித்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் பிறந்தவர்.

தாய் சாந்தி , தந்தை  பாஸ்கரன்  மனைவி சுதா மேரி

வளர்ந்ததும்  பள்ளி கல்வி படித்ததும் திருக்கழுக்குன்றம்.   செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ  வரலாறு பட்டம் படித்தவர்  .தற்போது சென்னைவாசி .  

விருதுகள் :

திராவிடர் கழகத்தின் பெரியார் விருது

2009 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருது

சிறுகதைகளுக்காக 2013ம் ஆண்டு உயிர்மை சுஜாதா விருது

இலக்கிய சிந்தனை விருது.

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருது( 2013 )

ஜெயந்தன் விருது ( 2016 )

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் எழுத்துச் சிற்பி விருது

எழுத்துச்சிற்பி விருது – கஸ்தூரிபாய் அறக்கட்டளை

இலக்கிய வீதி அன்னம் விருது ( 2016 )

சிறப்பு அங்கீகாரங்கள் :

2002 தி வீக் ஆங்கில நாளேடு தமிழின் சிறந்த வளரும் எழுத்தாளராக தேர்வு செய்துள்ளது

சின்னத்திரை விருது தேர்வுக்குழு உறுப்பினர் 2010

தொடர்புக்கு

கைபேசி எண் : 9884060274

மின்னஞ்சல் : ajayanbala@gmail.com