5. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

மோதிரக்குட்டு

எனது ஊரான திருக்கழுக்குன்றம் முத்துக்குமாரின் ஊரான காஞ்சீபுரம் இரண்டுக்குமிடையே 50 கிமீட்டர் தான்
எங்கள் ஊரில் என் கல்லூரி காலத்தில் சிந்தனை மையம் என்ற இலக்கிய அமைப்பு உருவாகி அவர்கள் வழியே எனக்கு நவீன இலக்கிய பரிச்சயம் உருவாகி அதன் வழியாகத்தன நான் இனி வாழ்க்கை இலக்கியம் சினிமாஎனும் பாதையை தேர்ந்தெடுத்தேன்
ஒரு ஞாயிற்றுக்கிழ்மை எங்கள் சிந்தனை மைய கூட்டத்துக்கு பேச வந்த இலக்கிய வீதி இனியவன் அவர்கள் காஞ்சீபுரத்தில் எங்களைப்போல இலக்கிய வட்டம் எனும் அமைப்பு சிறப்பாக செயல்படுவதாக சொன்னார் .
இதனைத்தொடர்ந்து எங்கள் அமைப்பைச்சேர்ந்த ஒருசிலர் காஞ்சீபுரம் சென்று இலக்கிய வட்டம் கூட்டத்துக்குச் சென்று பங்கேற்று திரும்பியிருந்தனர்.
அவர்களுடன் நானும் சென்றிருந்தால் ஒருவேளை முத்துக்குமாரை முன்னமே பரிச்சயம் கொண்டிருந்திருக்க முடியும்
காரணம் காஞ்சி இலக்கிய வட்டத்தில் முத்துக்குமாரை ஒரு இளவரசனாக பதினைந்து வயதிலேயே கொண்டாடினார்கள்
அவனது அப்பா திரு . நாகராசன் தமிழ் ஆசிரியர் மட்டுமல்லாமல் வீட்டிலேயே ஐயாயிரம் நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி நடத்தி வந்தார் . இதன் காரணமாக அவனுக்கு பள்ளிக் காலத்திலேயே இலக்கியம் தொட்டில் கட்டி விளையாடியது . பத்தாம் வகுப்பிலேயே நவீன கவிதைகள் எழுதத் துவங்கியிருந்தான் .
இலக்கிய வட்டம் அமைப்பினை உருவாக்கிய நாராயணன் அவனது பள்ளி ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான எக்பர்ட் சச்சிதான்ந்தன் வயது கூடிய நண்பர்கள் காமராஜ் அமுதன் மற்றும் தரும இரத்தினக்குமார் ( இயக்குனர் .ஆர் கே .செல்வமணியின் அண்ணன் ) போன்ற இலக்கிய வட்ட உறுப்பினர்கள் அவன் கவித்திறமையை கொண்டாடத்துவங்கினார்கள்
தூசிகள் எனும் அவன் முதல் கவிதைதொகுப்பை அவன் பதினோராம் வகுப்பு படிக்கும் போதே அவர்கள் இலக்கிய வட்டம் மூலமாக வெளியிட்டனர். அ
பின்னாளில் முத்துக்குமாருக்கு கிடைத்த அத்தனை புகழுக்கும் அவன் அப்பா கொடுத்த ஊக்கத்தை அடுத்து இந்த இலக்கிய வட்ட நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் வரவேற்பும் மிக முக்கிய காரணம் . அந்த சிறு வயதில் கிடைத்த அங்கீகாரம் அவனுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஊற்றி எதிர்காலம் குறித்த பெரும் கனவுக்கு வித்திட்டது
தூசிகள் வெளியான சில நாட்களிலேயே அவன் படித்து வந்த காஞ்சீபுரம் ஆண்டர்சன் பள்ளியில் பிர்ச்னை எழுந்தது . அந்த வயதில் அவனுக்கு தெரிந்த முக்கிய உலகம் அந்த பள்ளிக்கூடம் தான். அதனால் பள்ளிக்கூட அனுபவங்கள் நல்லது கெட்டதுகளும் கவிதையாக தூசிகலில் அச்சாகியிருந்தது . பள்ளிக்கூட நிர்வாகம் கொதித்தது. முத்துக்குமாரை சஸ்பெண்ட் செய்ய அதிரடி முடிவெடுத்தது . அச்சமயம் அவனது ஆசான் களில் ஒருவரும் எழுத்தாளருமான எக்பர்ட் சச்சிதானந்தம் இதில் தலையிட்டு அவன் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்லி வைத்தார்,.
அதே உற்சாகத்துடன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் படிக்க வந்தவன் தொடர்ந்து தன் கவிதைகளை ஒவ்வொரு பத்ரிக்கையாக தேடிச்சென்று கொடுத்து பிரசுரமாக வழி தேடினான். . அத்தோடு ஊரில் அவனது நண்பனின் தந்தை அரசுப்பணியாளர் ஒருவர் இயக்குனர் அருண்மொழி யை வைத்து கலைப்ப்டங்கள் தயாரித்து வந்தார் . அவர் பரிந்துரையின் பேரில் இயக்குனர் அருண்மொழியிடம் உதவி இயக்குனராக சேர்ந்துகொண்டான். அருண்மொழி மூலம் பட்டுக்கோட்டை பிரபாகரை சந்திக்க வாய்ப்புகிட்டிய போது அவர் எழுதிக்கொண்டிருந்த தொலைக்காட்சி தொடரில் திரைக்கதையில் உதவியாளராகவும் பணிசெய்தான்
இப்படி ஒரே சமயத்தில் கல்லூரி மாணவனாகவும் கவிதை எழுதுபவனாகவும் உதவி திரைக்கதையாளனாகவும் உதவி இயக்குனராகவும் அத்தோடு எங்களோடு உலக சினிமா பார்ப்பவனாகவும் பல முகங்களில் திரிந்துகொண்டிருந்தான்
அப்படியாக திக்கு திசை தெரியாமல் ஓடியதன் பலன் ஒரு நாள் சூரியன் உதிக்கும் போது நா.முத்துக்குமார் என பெயரை எழுதிக்கொண்டு கடலிலிருந்து முகிழ்ந்தது
அன்று மாலை ராணி சீதை ஹாலில் கணையாழி 25ம் ஆண்டையொட்டி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்ப்டிருந்தது
வழக்கமாக மாலை நேர இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போல அவனும் அந்நிகழ்ச்சியில் சென்று ஆறாவது வரிசையில் அமர்ந்திருந்தான்
கமலஹாசன் அசோகமித்திரன் இந்திரா பார்த்தசாரதி என மேடையிலும் சபையிலும் ஆன்றோரும் சான்றோரும் மிகுந்த சபை
இவர்களின் உச்சமாக எழுத்தாளர் சுஜாதா மைக் முன் வந்து நின்றார்
கணையாழிக்கும் அவருக்கும் கடைசி பக்கம் பந்தம் உண்டாகி கால்நூற்றாண்டு ஆனதை மகிழ்வுடன் நினைவுகளாக பரிமாறிக்கொண்டவர். இப்போதும் கவிதைகளை தானே தேர்வுசெய்வதாகவும் தன்னிடம் தேர்வில் பாரபட்சம் எதுவும் இல்லை என்றும் கூறியதுடன் இந்த வார கணையாழிக்கு வந்த கவிதைகளில் ஒரு கவிதை தன்னை பெரிதும் ஈர்ததென புகழ்ந்து அந்த கவிதை தமிழின் ஆகச்சிறந்த 25 கவிதைகளில் ஒன்றாக த்னது பட்டியலில் இடம் பெறும் தகுதியுடையது எனக்கூறிவிட்டு தொடர்ந்து அந்த கவிதையை வாசிக்கத்துவங்க கீழே ஆறாம் வரிசையில் அமர்ந்திருந்த 21 வய்து முத்துக்குமாருக்கு உடலில் மின்சார அதிர்வு .
அவன் எழுதிய தூர் கவிதைதான் அது
கவிதையை முழுவதுமாக வாசித்த சுஜாதா ..கரவொலி அடங்கியதும் இந்த கவிதையை எழுதியவர் யார் என எனக்குத்தெரியாது .. பெயர் கூட நா. முத்துக்குமார் என உள்ளது எனக்கூறி நிமிர பார்வையாளர் வரிசையில் ஒரு கை உயர்ந்திருப்பதை கண்டு ஆச்சர்யத்துடன் நீங்களா என சுஜாதா கேட்க ஆமாம் என முத்துக்குமார் எழுந்து நிற்க பார்வையாளர்களின் கரவொலி மேலும் அதிர்ந்தது .அச்சம்பவம் அத்தோடு முடிந்திருந்தால் கூட இது எதேச்சை என விட்டுவிடலாம் . ஆனால் இயற்கை அவனுக்கு இன்னும் கூடுதல் கருணையுடன் முன் வரிசையில் இருந்த ஒரு வசதி படைத்த பார்வையாளனை எழுப்பி மேடைக்கு உந்தித்தள்ளி அந்த கவிதை எழுதிய கவிஞனுக்கு 1000ம் ரூபாய் அந்த மேடையிலேயே பரிசளிக்க விரும்புவதாக் கூற மீண்டும் பலத்த கரவொலியுடன் முத்துக்குமார் மேடைக்குச்சென்று அதை வாங்கிக்கொண்டான் . வாங்கிய கையுடன் பணத்தை முத்துக்குமார் எண்ணி சரிபார்க்க அனைவரும் அவனது செயலை அமைதியுஅட்ன் பார்த்தனர். அந்த அமைதிக்குபின் பலவித மனவோட்டங்கள். தானம் கொடுத்த மாட்டின் பல்லை எண்ணத்தகுமோ என்பது போல .ஆனால் அப்படி நினைத்தவர்கள் தான் இன்னும் அதிகமாக அடுத்த நிமிடம் உற்சாகத்துடன் அவன் செய்த செயலை பார்த்து ஆச்ச்ர்யத்துடன் கைககளை தட்டினர்.
அவன் தனக்கு கொடுக்கப்பட்ட பணத்தில் 500 ரூபாயை தன் பககெட்டில் வைத்துக்கொண்டு மீதி 500ரூபாயை மைக் அருகில் வந்து கணையாழி அறக்கட்டளை வளர்ச்சி நிதிக்கு கொடுப்பதாக சொன்ன அறிவிப்பு சுஜாதாவுக்கே ஆச்சரயத்தை தந்திருக்கும்
அவனது செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை
வாய்ப்புகளும் நல்ல சந்த்ர்ப்பங்களும் எல்லோருக்கும் ஏதோ ஒரு சமயம் வாழ்க்கையில் வந்தே தீரும் . அந்த சந்தர்ப்பங்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை பொறுத்தே அது கூடுதல் வெற்றியை பெற்றுத்தந்து அவைக்கு முந்தியிருக்கச்செய்து விடும் . அந்த ஒரு கணம் அந்த ஒரு செயல் அன்று இரவு வீட்டுக்கு திரும்பிய பார்வையாளர்களின் வாய் மூலம் பலருக்கும் நா.முத்துக்குமார் எனும் பெயர் பரவத்துவங்கியது.
அது இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் செவிகளுக்கும் சென்று சேர்ந்தது
பலன் தூர் கவிதை 500 பேரிலிருந்து 5000ம் பேரின் முன்பாக அவரால் அடுத்த ஒரு சில வாரங்களில் அவரால் வாசிக்கப்பட்டது கோடம்பாக்கத்தில் பெப்சி படைப்பாளி மோதல் உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது . . அந்த சூழலில் காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்வில்தான் பாலு மகேந்திரா அவர்கள் அந்தக்கவிதையை வாசித்தார்
மறுநாளே அவர் தன்னிடம் உதவியாளனகாவும் அவனை சேர்த்துக்கொண்டார்.
இச்சூழலில் அவன் அதற்குமுன் பணிசெய்த பட்டுக்கோட்டை பிரபாகரிடமிருந்து ஒரு அழைப்பு முத்து உன் கவிதைகள் ஏதவாது இருந்தா கொடு நான் எழுதற சீரியலுக்கு தேவைப்படுது
எனக்கேட்டவுடன் அடுத்த நாளே சைக்கிளில் அவன் சென்று தன எழுதி வைத்திருந்த டைரியை நீட்ட அவரோ அதை புரட்டியபடியே ஏன் இன்னும் நீ தொகுப்பு போடலை.. தொகுப்பு போட்டாதானே உனக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என விதை போட்டார்
மறுநாளே திருவல்லிகேனியில் அச்சகம் நடத்தும் நண்பனை பார்க்க சைக்கிளில் விரைந்தான் .
அவன் அப்பாவோ கவிதை தொகுப்பு ஆயிரம் காப்பி போடணும்னா 20,000ம் ஆகும் என்றார்
இருபதாயிரமா முத்துக்குமாருக்கு அதைகேட்டவுடனே புத்தகம் போடும் கனவு நொறுங்கியது
அப்பா தான் அப்படிச்சொன்னாரே ஒழிய அந்த இஸ்லாமிய நண்பன் வெளியே வந்து முத்துகுமாரின் தோளைத்தொட்டு ஆறுதலாய் ஒரு வார்த்தை சொன்னான்

( தொடரும்0 )


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *