எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை

Adoor Gopalakrishnan during a ceremony hosted by Margi, Thiruvananthapuram in 2012. Photography by HAREE FOTOGRAFIE, NEWNMEDIA™.

அடூரின் படங்களிலேயே ஆக்ச்சிறந்த படம் எலிப்பத்தாயம் தான் . கச்சிதமான திரைக்கதை ,துல்லியமான காட்சி பதிவு, செறிவான படத்தொகுப்பு எல்லாம் ஒருமை கூடியபடம் என்றால் அது எலிப்பத்தயாத்தில் மட்டுமே அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது . நான் முன்பு அவரது முதல் படமாம சுயம் வரம் படத்தில் சொன்ன காட்சிமொழி விமரசனம் என்ன என்பதை இரண்டு படங்களையும் ஒரு சேர பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்
அது போன்ற எந்த குறைபாடும் இல்லாத முழுமையான கலைப் படைப்பு என்றால் அது எலிப் பத்தாயம் தான் . ஒருவகையில் இந்த கதை அவருடைய சொந்தக் கதையாக வாழ்வில் அனுபவித்த கதையாக இருந்ததாலோ என்னவோ உருவகங்களில் அத்தனை கச்சிதம் . எந்த தப்பித்தலு ம் இல்லாமல் படைப்பாக அவரிடம் காட்சிகளில் ஒரு தன்னியல்பு ஆகியவை எலிப்பத்தாயத்தின் வெற்றி .
இதனால் தான் வெறும் ஒரு பெரிய வீட்டையும் ஒரு எலிப்பொறியையும் நான்கைந்து பாத்திரங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு அவரால் கட்டுக்கோப்பான ஒரு படைப்பை செதுக்கியிருக்க முடிந்தது
இந்த படம் மருமக்கதாய குடும்ப வழிமுறை எனும் கேரளாவில் நாயர் சமூகத்தில் வழிவழியாக பின்பற்றும் தாய்வழி சொத்துரிமை முறையை பின்புலமாக கொண்டது . இது குறித்து விக்கிபீடியாவில் தனி பக்கமே இருக்கிறது தேவைப்படுபவர்கள் தேடிப்படித்து தெரிந்துகொள்ளலாம்
வல்லியதறவாடு வீட்டில் ஒரு அண்ணனும் மூன்று தங்கைகளும் வசிக்கின்றனர் . பழம் பெருமைக்கு மிச்சமிருக்கும் சில குத்து விளக்கும் சில பாரம்பர்ய பண்டு பாத்திரங்களும் தவிர வீட்டில் எதுவுமில்லை . அண்ணனோ வேலைக்கு போகாமல் வீட்டில் ஈசிசேரில் தினசரி பேப்பர் படிக்கும் மகா உலோபி . அவன் பெயர் உண்ணி. மூத்தவள் எப்படியோ கல்யாணம் செய்துகொண்டு போக மீதம் இரண்டு பெண்கள் . இரண்டாவது பெண் ராஜம்மா ( சாரதா) கல்யாண வயதைக் கடந்து விட்டவள் . வீட்டின் சமையல் முதல் கூழையன் அண்ணனுக்கு பணிவிடை வரை அவள் தான் எல்லாம் . . எங்கே அவளுக்கு திருமணம் செய்தால் சொத்தை இழக்கவேண்டி வருமோ என உண்ணிக்கு அச்சம் . அத்னால் கல்யாணம் செய்யாமலே அவளை கொத்தடிமையாக வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான் . ராஜம்மாவும் அண்ணனை எதிர்க்க திராணியில்லாமல் வீடு எனும் கூண்டில் அடைபட்ட எலியாக வாழ்பவள்.
மூன்றாமவள் ஸ்ரீதேவி . வசீகர்மானவள் கனவுலகவாசி . கல்லூரிபடிப்பில் தோற்றுப்போய் டுடோரியல் படிக்கச்செல்பவள்
கூழையன் உண்னிக்கு எலியை கண்டால் பயம் ஒவ்வொரு நாளும் எலிப்பொறியில் எலியை பிடிப்பதும் அதைக்கொண்டு போய் விட்டிலுள்ள குளத்தில் சாகடிப்பதும் அக்கா தங்கைகளின் வேலை .
காமிரா வீட்டிற்குள் வரும் வித்தியசாமன சில நபர்களை ஒவ்வொருவராக காண்பித்து கதையை நமக்குள் கடத்துகிறது
ராஜம்மாவை மனைவியை சமீபத்தில் இழந்த ஆணுக்கு இரண்டாவதாக பெண்கேட்டு வருகிறான் உறவினன் ஒருவன் . சமையல் கட்டில் நின்றபடி ஆவலுடன் காத்திருக்கும் ராஜம்மாவின் முகம் அண்ணனின் பதிலைகேட்டு இருளடைகிறது . அவள் முகத்தின் படரும் துயருன் இசை மிச்சமிருக்கும் இளமையையும் கொல்லப்படுவதை நாம் உணரமுடிகிறது
தொடர்ந்து அரபு நாட்டிலிருந்து திரும்பி வரும் இன்னொரு உறவினன் . இரண்டு பெண்களும் கூலிங்கிளாசும் பாரின் டிஷர்ட்டுமாய் வரும் அவனைக்கண்டு வியக்கின்றனர். அவனுக்கோ இளையவள் ஸ்ரீதேவியின் அழகு மேல் மையல் . கையோடு கொண்டு வந்த வெளிநாட்டு மணப்பூச்சு ஒன்றை பரிசளிக்கிறான். அவளும் அதை வாங்கிக்கொண்டு இதயத்தால் சிரிக்கிறாள் . இந்தசமயத்தில் பெருச்சாளியாய் குறுக்கே வருகிறான் உண்ணி. பெண்கள் அவனை காபி சாப்பிட்டு போகச்சொல்ல அண்ணன் அவனை நோட்டம் விடுகிறான் . வெளிநாட்டு வேலை எப்படி இருக்கிறது என கேட்டுவிட்டு பின் இங்க கோட்டு சூட்டு பொட்டு திரியிறவன்ல்லாம் அங்க கீழ்த்தரமான வேலை செஞ்சி நக்கி பிழைக்கிறானுங்க போலருக்கே என உண்ணி விஷ ஊசி ஏற்ற அவமானத்தால் கூனி விடுகிறான் அவன் . பின் காபிகூட குடிக்காமல் அங்கிருந்து போய்விடுகிறான் . இப்படி த்ங்கைக்கு வரும் வரன்கள் அனைத்தையும் சொத்து தன் கட்டுப்பாட்டிலிருந்து போக்க்கூடாது என்பதில் குறியாக இருக்கிறான்
அதே சமயம் அவன்மிகப்பெரிய கோழையும் கூட நள்ளிரவில் வீட்டுத்தோட்டத்தில் தேங்காய் பறிக்க வரும் திருடனை விரட்டும் துணிச்சல் கூட இல்லாமல் சகோதரிகளின் கூச்சலை பொருட்படுத்தாமல் போர்வையை இறுக்க மூடி படுத்துக்கொள்கிறான் .
மூத்த சகோதரியின் பையன் ஒருநாள் தங்களுக்கு சேரவேண்டிய பங்கைக்கேட்டு வர வீட்டுக்கு வருகிறான் . அவனிடம் பங்கெல்லாம் தரமுடியாது வேண்டுமானால் வீட்டில் வந்து தங்க்கிக்கொள்ளுங்கள் என உண்ணு சலுகை தருகிறான் .
அதுமுதல் மூத்த சகோதரியும் மகனுடன் வீட்டில் தங்குகிறாள் எப்படியும் சொத்தில் தன் பங்கை வாங்கிக்கொண்டு போயாக்வேண்டும் என்பதில் அவளும் உறுதியாக இருக்கிறாள்
இன்னிலையில் கடைக்குட்டி ஸ்ரீதேவி ஒருநாள் காணவில்லை . யாருடனோ ஓடிப்போய்விட்டாள் . ராஜம்மா உண்னியிடம் பதட்டத்துடன் தங்கையை தேடுமாறு அல்லது போலீசில் சொல்லுமாறு கேட்க உண்ணி ஈவு இரக்கமில்லாமல் அசையாமல் வீட்டிலேயே இருக்கிறான் .
ஒருவகையில் அவனுக்கு சொத்து அவன் கைவிட்டு போகவில்லை என்பதில் குரூர மகீழ்ச்சி
இறுதியில் ஒருநாள் ராஜம்மாவுக்கு கவலையும் நோயும் கூடிப்போக காப்பாற்ற வழியிலலாமல் இறக்கும் தருணம் . குல வழக்கப்படி கைவிடப்பட்டு உயிருக்கு போராடும் அவள் உடலை தூக்கிச்செல்ல ஊரார் வருகின்றனர்
எலியை பொறியில் தூக்கிச்செல்லும் அதே வழியில் ராஜம்மாவும் பரிதாபகரமாக ஆட்களால் கட்டிலோடு தூக்கிச்செலப்படுகிறாள். கடைசியில் கருணைக்கொலையும் செய்யப்படுகிறாள்
மூத்தவளும் வெறுத்துப்போய் மகனோடு வீட்டுக்குப்போய்விட அண்ணன் உண்ணிமட்டும் பூட்டிய வீட்டுக்குள் தனியாக இருக்கிறான் . தனிமை பயம் அனைத்தும் சேர்ந்து அவனுக்குள் மனப்பிறழ்வை உண்டாக்கிவிட ஒருநாள் அவனது நிலை காணும் ஊரார் வீட்டுக்குள் அதிரடியாக கதவை உடைத்து அவனை வெளியே எடுக்கின்றனர்
பின் அவனையும் ராஜம்மாவை கொண்டு செல்வது போல குளத்துக்கு தூக்கிச்செல்வது போல குண்டு கட்டாக தூக்கிச்செல்கின்றனர்
இறுதிக்காட்சியில் குளத்தில் மூழ்கடிக்க்கப்பட்ட உயிருடன் எழுந்து வெளியே வந்து கையெடுத்து கும்பிடுவதுடன் படம் முடிகிறது
மணமாகத மூன்று சகோதரிகளின் கதை பெர்க்மனின் cries and visbers ஞாபகப்படுத்துகிறது. ஒரு வேளை அடூர் அந்த படத்தின் பாதிப்பில் கூட இந்த திரைக்கதையை யோசித்திருக்கக்கூடும் .
படத்தில் தனிசிறப்பு காமிரா கோணங்கள் . கேரள தரவாடு வீடு பல படங்களில் கையாளப்பட்டிருந்தலௌம் இந்த படத்தில் மிகச்செறிவான் கட்டமைவில் ப்டத்தின் உள்ளடக்கத்துக்கு ஒட்க்ஹ்துழைக்கும் விதமாக படம்பிடிக்கப்ப்ட்டிருக்கின்றன. குல மரபும் பார்ம்பரயமும் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நம்மை தொடர்ந்து வருகின்றன. கதவுக்கு பின்னால் வாசலுக்கு பின்னால் பெண்கள் தயங்கி நிற்கும் காட்சிகளில் அவை ஆணாதிக்கத்தின் குறியீடுகளாய் மாறிவிடுகின்றன.
எலியை பிடிக்கும் வேட்டையில் உடையும் குத்து விளக்குகள் உபயோகமற்ற பழைய பாத்திரங்கள் பரம்பரய்த்தின் வீழ்ச்சியை குறியீடுகளாக உணர்த்துகின்றன
எலியை கொல்ல பொறியிடன் ஸ்ரீதேவி குளத்தை நோக்கி தோட்டத்தின் வழி எடுத்துச்செல்லும் காட்சியில் காமிராவின் அசைவும் எம் பி சீனிவாசனின் பின்னணி இசையும் தான் இந்த படத்தை உலகத்த்ரமிக்க படமாக உயர்த்துகின்றன.
பிற்பாடு அதே இசை அதே காமிர கோணம் ராஜம்மாவின் உடலும் உண்னியின் உடலும் தூக்கிச்செல்லப்படும்போது உருவகம் வழி கவித்துவம் கதை சொல்ல இரண்டும் சினிமாவில் உச்ச நிலை எட்டுகிறது
அடூரின் படங்களின் ஒட்டுமொத்த காட்சிகளிலேயே இதுவே சிறந்த ஒன்றும் ஆகும்
அடூர் இந்தியாவில் மிகச்சிறந்த ஐந்து இயக்குனர்களில் ஒருவராக இந்த ஒரு படத்தைக்கொண்டே மதிப்பிடவும் முடியும்

1 Comment

  1. மணிகண்டன்

    ஆமாம். காட்சி உருவக மொழியில் இப்படம் மிக முக்கியாமானது.சத்தியஜித்ரேவின் ஆக பெரும் தெடர்ச்சியாக உணர்ந்தேன். சினிமா மொழியை இஞ்ச் இஞ்ச்சாக கற்றுக்கொள்ள ஏதுவான படம் சார். படம் நெடுக ஒரு கள்ள அமைதிையை உண்ணியின் சோம்பலின் குறியீடாக அவர் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும்பலமாகவும் அதேவேளையில் பார்வையாளனிடம் ஒரு வித resteless ஐம் ஏற்படுத்துகிறது. அது பலவீனமாகவும் கருதபடுகிறது. இது முழுக்க முழுக்க உண்ணிக்கான உள் மன விசாரணை. இறுதி காட்சியில் குளத்தில் முழ்கி எழும் உண்ணி வாழ்நாள் உறக்கத்திலிருந்து மீண்டதாக முடித்திருப்பது மாற்றத்தின் குறியீடு.மேலும் இறுதி காட்சிகள் வெளியிலிருந்து (சமூகத்திலிருந்து)ஒரு அழுத்தம் வெளியிலிருந்து யாரேனும் ஓங்கி உடைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *