27 down – 1973

3.பேர்லல் சினிமா எனும் இந்தியாவின் பொற்காலம்

இந்திய சினிமாக்களில் 27 down ஒரு அற்புதமான இடையீடு. பிரெஞ்சு நியூவேவ் பாணியில் தொழிநுட்பங்களை கையாண்ட விதம் இந்திய சினிமாவுக்கு புதுசு . அதுவரை கதை கதாபாத்திரங்கள ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த கலை சினிமாவில் காமிரா நகர்வும் சப்தம் உள்ளிட்ட தொழில் நுட்பமும் இப் படம் மூலம் முக்கியத்துவம் பெற்றது. .நகரவாழ்க்கையின் எதார்த்தம் காமிரா வழியே நமக்குள் பிதுங்கி வழிவதுதான் இப் படத்தின் மிகபெரிய கலாபூர்வ வெற்றி .
மும்பையிலிருந்து வாரணாசிக்கு ரயிலில் புனிதப் பயணம் செய்யும்போது நாயகன் சஞ்சய்க்கு இதே ரயில் சப்த்துடன் ஒன்றீணைந்த அவனது கடந்த கால காதல் வாழ்க்கை ஞாபகம் வருகிறது.
அவன் தந்தை ஒரு ரயில் டிரைவர். ஒரு விபத்தில் கால் இழந்தபின் அவரது ரயில்வே வேலை மகனுக்கு வருகிறது. அவனோ ஓவியக்கலைஞன். அதுதான் அவ்ன் கனவும் கூட . ஆனால் அப்பாவுக்காகவும் குடும்பத்துக்காகவும் மும்பை புற நகர் ரயிலில் டிக்கட் பரிசோதகராக வேண்டா வெறுப்புடன் வேலைக்கு சேருகிறான். தினசரி ரயிலில் பிதுங்கி வழியும் ஜன நெரிசல்களிடையே டிக்கட் பரிசோதிக்கும் பணி . ஒருநாள் எதிர்பாராமல் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் ஷாலினியை சந்திக்கிறான்.அவள் டிபன் பாக்ஸ் இவனோடு விபத்தாக பயணிக்க அதை மறுநாள் அவளிடம் ஒப்படைக்கப்போக இருவருக்குமிடையில் புற நகர் ரயிலில் காதல் வளர்கிரது.
படத்தின் உயிரோட்டமே மும்பை புறநகர் ரயில் காட்சிகள் தான். நகர வாழ்வின் எதார்த்தம் சக்கரங்களுக்கிடையே கசங்கி மக்கள் வெளிவரும் காட்சிகளில் கண்களை நிறைக்கிறது . மும்பை விட்டோரியா டெர்மினசில் மெதுவாக வந்த்டையும் லாங் ஷாட்டில் துவக்கத்தில் ஒவ்வொரு பெட்டிலியிருந்து ஒருவர் இருவராக இறங்கி காமிராவை நோக்கி நடந்து வர நொடியில் ஜனத்திரள் முழு காமிராவையும் அடைக்கும் அந்த ஒரே ஷாட் கவித்துவம்
எழுபதுகளின் துவக்கத்தில் இந்திய பெரு வாழ்விலிருந்தது என்பதறகு இப்படம் சரியான ஆவணம். கதை மூலம் சொல்லப்பட்ட உண்மையிலிருந்து காட்சி வழி கடத்தப்படும் உண்மைதான் பேர்லல் சினிமாவின் சாதனை . படத்தின் 70 சதவீத காட்சிகள் காமிராகோணம் கைகளால் தாங்கியபடியே இயக்கப்பட்டது 1966ல் வெளியான பேட்டில் ஆப் அல்ஜீயர்ஸ் திரைப்படம் தான் தனக்கு இதுபோல கைகளால் சுமந்து காமிராவை இயக்கும் பாணிக்கு உந்து சக்தியாக இருந்தது என படத்தின் ஒளிப்பதிவாளர் அப்ரூப கிஷோர் பிர் பிற்பாடு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார், அது போல படத்தின் உயிரூட்டத்துக்கு ஹரிபிரசாத் சவ்ராசியாவின் பின்னணி இசை இந்திய நிலப்பரப்பின் வெம்மை கலந்தத துயரத்தை ஒரு தூரத்து நதி போல மனதுக்குள் திரைக்கதையோடு பயணிக்கிறது
நாயகி ஷாலினி பாத்திரத்தில் நடித்த ராக்கியின் பேசும் கண்கள் படம் முழுக்க இதயத்தில் கவிதை எழுதுகிறது . நாயகனாக சஞ்சய் பாத்திரத்தில் நடித்த ஏகே ரெய்னா இப்பவும் அப்பா ரோலில் சினிமாவில்
படத்தின் இயக்குனர் அவ்தார் கவுல் கிருஷ்ணா வுக்கு இதுவே முதல் படமும் கடைசி படமும் கூட . படம் வெளியாகி அந்த் ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்ட்ட சில நாட்களிலேயே இறந்து போனது இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு.
இன்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கும் போது 27 down ஒரு மைல் கல்லாக உயர்ந்து நிற்கிறது. ஆனால் அதன் இயக்குனரான அவ்தார் கிருஷ்ணா வுக்கு ஒரு விக்கிப்பீடியா தகவல்கூட இல்லை .
படம் யூ ட்யூபில் கிடைக்கிறது .

கீழே லிங்க் youtube.com/watch?v=fPR1hhwfSiI&t=3175s

நாளை அடுத்த பகுதி : பேர்லல் சினிமா பகுதி 4ல் – கரம் ஹவா 1974

1 Comment

  1. Manikandan

    8 வருடங்களுக்கு முன்பு 27 down இந்த படத்தை எதர்ச்சையாக பதேர்பாஞ்சாலியை ட்டாரொண்டில் தேடும் போது கண்டடைந்து பார்த்தது. இப்போது நீங்கள் எழுதிய இந்த பதிவை பார்த்தபின்புதான் ஞாபகம் மீள்கிறது. பம்பாய் நகர இரயில் நிலைய காட்சியை சொல்லும் போதுதான் சட்டென ஞாபகத்தில் வந்து போனது. அதுவும் ஒரு துயர் முடிவுடன் முடியும்‌ படம் என்றே நினைக்கிறேன். பதேர் பாஞ்சாலியின் முழுமையான பாதிப்புடன் இருக்கும் இப்படம். சரியா சார்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *