கவிதைகள்

பாதங்களின் பாரதம் – லாக்டவுன் கவிதை

பாதங்கள் பலவகைமஞ்சளாய் வெளுப்பாய் சில கறுத்தும் கூட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள்பித்த வெடிப்பில் தோல்கள் பிய்ந்து ஆணியேறி கரடு பிடித்து ‘காப்பு ஏறி உழைக்கும் பாதங்கள் வலி தாங்கிகள் ‘பல்லுடல் தாங்கும் பெண்ணின் பாதங்கள் பேரன்பை போதிப்பவை தலைச்சுமை தாங்கும் ஆணின் பாதங்கள் உளச்சுமையும் தாங்கும் ஆற்றல் மிக்கவைஇந்த பாதங்கள் பொற்பாதங்கள் தேசத்தின் பேரிடர்…
Read more

கவிதை

ஒரு வித கருத்து என்னைக் குத்த வந்த போது நான் பேனா விற்றுக்கொண்டிருந்த வீதியில் அந்த ரயில் வந்தது அதிக முடிவளர்த்தவன் கையில் சொம்புடன் அந்த எலட்க்டிரிக் ரயிலில் என்னை பார்த்தவுடன் பிகுபிகு பிலுபிலு என கத்தினான் ‘ பத்மினி வீட்டுக்கு பழம் விற்றவளின் கூடையில் ஆப்பிளை எடுத்து சுவைத்தபடியே நான் கண்ணாடியோரம் கூலிங்கிளாசுடன் வேடிக்கை…
Read more

என்ன செய்வது ?

ரத்தம் தெறிக்கும் சதைத்துண்டு காலையில சோத்துத்தட்டில் விழுந்துதெறித்தது எந்த மதம் எந்த சாதி எதுவும் எழுதியிருக்க வில்லை அந்த வெடிகுண்டுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை ஒரு வெறுப்பு ஒரு கெட்ட எண்ணம் . அவ்வளவுதான் அதுக்கு மதம் இல்லை சாதி இல்லை. மனித மனத்தின் சஞ்சலம் அவ்வளவே செத்த உடம்பில் ஒன்று அந்த புத்தனுடையதாகக் கூட இருந்திருக்கலாம்…
Read more

அறுக்கும் பட்டன்களின் உலகம்-

அறுக்கும் பட்டன்களின் உலகம் ரண்டு கால் உள்ள மனிதனே உயிர் வாழ தகுதியுள்ளவன் அவன் நடக்கவும் தாவவும் பறக்கவும் செய்யும்போது உலகம் அவனுக்காய் பட்டன் அவிழ்க்கிறது ஒரு நாளிதழின் மூன்றாம் பக்கத்தால் அவனுக்கு நேர்த்தியாக ஆடைசெய்கிறது மூச்சு முட்ட அவனுக்கு தலைக்கவசமும் இரும்புக்கையுறையும் அணிந்து அழகுபார்க்கிறது கூடவே அவன் உறங்க உறுதியான ஒரு மரப் பெட்டியும்…
Read more

கொரொனா கால பெரு நகரத்துத் தனியர்கள் – -அஜயன்பாலா

பூட்டிய வீட்டுக்குள் யாருமற்றவர்களின் துயரத்தை யோசித்துப்பாருங்கள். பூரான் பல்லி பூச்சிகள் விளையாடும் அவர்களின் அக உலகம் வீடற்றவர்களைக் காட்டிலும் கொடியது. இப் பெரு நகரத்துத் தனியர்களுக் களுக்காக என் இதயம் வருந்துகிறது. உங்கள் அக்கம் பக்கம் தனியர்கள் வசித்திருப்பின் வாய்விட்டுக் கேளுங்கள் ஐயா சாப்பிட்டீங்களா அவர்கள் கூச்ச சுபாவிகள் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்பவர்கள் அதனால் தைரியமாக…
Read more