புதியப்பதிவுகள்

பாதங்களின் பாரதம் – லாக்டவுன் கவிதை

பாதங்கள் பலவகைமஞ்சளாய் வெளுப்பாய் சில கறுத்தும் கூட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள்பித்த வெடிப்பில் தோல்கள் பிய்ந்து ஆணியேறி கரடு பிடித்து ‘காப்பு ஏறி உழைக்கும் பாதங்கள் வலி தாங்கிகள் ‘பல்லுடல் தாங்கும் பெண்ணின் பாதங்கள் பேரன்பை போதிப்பவை தலைச்சுமை தாங்கும் ஆணின் பாதங்கள் உளச்சுமையும் தாங்கும் ஆற்றல் மிக்கவைஇந்த பாதங்கள் பொற்பாதங்கள் தேசத்தின் பேரிடர்…
Read more

சதாத் ஹசன் மாண்டோ & புதுமைப்பித்தன் ஆச்சர்யமான ஒற்றுமைகள்

இரண்டு வருடத்துக்கு முன் மாண்டோ படம் முதல் நாள் முதல் காட்சி பலோசோவில் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்து டைட்டில்கள் ஸ்கோரோலிங் மேலே உயர என் கண்ணீர் கன்னத்தில் உருண்டுகொண்டிருந்தது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்து நிம்மதியற்றுப்போன இரவு அது. படம் பார்த்த பாதிப்பு என்னைபோல அனைவருக்கும் இருந்திருக்காது போல . எல்லோரும் சாவகாசாமாக…
Read more

பூமிகா : 1977 ; இந்தி ; இயக்கம் .ஷியாம் பெனகல் இந்திய சினிமாவின் பொற்காலம் . 24 பேர்லல் சினிமா அலை;

பூமிகா : 1977 ; இந்தி ; இயக்கம் .ஷியாம் பெனகல் இந்திய சினிமாவின் பொற்காலம் . 24 பேர்லல் சினிமா அலை இன்று இந்திய சினிமாவில் பெண் மைய சினிமாக்களுக்கு மிகப்பெரிய வணிக சந்தை உருவாக்கியிருக்கிறது .கஹானி டர்ட்டி பிக்சர் துவங்கி வரிசையாக பல திரைப்படங்கள் இந்தியா முழுக்க வெற்ரிபெற்று வருகின்றன. ஆனால் நாற்பது…
Read more

மொளக்குச்சி – சிறுகதை ; அஜயன் பாலா

ராஜா நடந்துகொண்டிருந்தான். பழக்கமில்லாத காட்டுப்பாதை தலைக்குமேல் தவழ்ந்த வேலிகாத்தான் கிளையை விரலால் நாசூக்காகப் பற்றித் தூக்கிப் பிடித்தவாறு முன்னாள் செல்லும் வேலுச்சாமியின் பின்னாள் நடந்துகொண்டிருந்தான் இடப்பக்கமாக கிளைகளுக்கு நடுவே முகத்தை மறைத்தபடி ஐந்தாறு பெண்கள் முகத்தை முந்தானையால் மூடியபடி இவன் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தனர். .கோடையின் வெம்மை உடல் முழுக்க பிசுபிசுப்பாக்கியிருந்தது. தொலைவில் எங்கோ கொட்டடிkகும் சத்தம்…
Read more

அர்த சத்யா : 1982 ; இந்தி இயக்குனர் : கோவிந்த் நிஹலாணி .இந்திய சினிமாவின் பொற்காலம் ; 23. பேர்லல் சினிமா அலை

அதிகார கட்டமைவுக்கு எதிரான குரல்களை மட்டுமே பதிவு செய்து வந்த பேர்லல் சினிமா முதல்முறையாக அதிகாரத்தின் கருவியாக இருந்து வரும் காவல் துறையில் சிக்கிக்கொண்ட கடமை உணர்ச்சிமிக்க காவலன் ஒருவன் ஆளும் கட்சியினரால் மன்ச்சிதைவுக்கு ஆளாவதை துல்லியமாக நமக்கு படம்பிடித்து காண்பித்தது. ஆனந்த வடேகர் ( ஓம்புரி ) எனும் மும்பை காவல்துறை அதிகாரியும் கல்லூரி…
Read more

மா பூமி : 1980 தெலுங்கு . இயக்குனர் கவுதம் கோஷ் .இந்திய சினிமாவின் பொற்காலம் ; 22. இந்திய சினிமாவின் பொற்காலம்

மா பூமி வரலாற்றுச்சிறப்பு மிக்க தெலுங்கானா போராட்ட பின்னணியைக் கொண்டது . 1946ம் ஆண்டு இந்திய விடுதலைக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் ஒரு பகுதி ஹைதரபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. தெலுங்கானா என அழைக்கப்படும் இப்பகுதியில் நிஜாம் ஆட்சியின் ஜமீன்தார்கள் வரி என்ற பெயரில் விவசாயிகளை கொடுமைக்குள்ளாக்கி வந்தனர். . இந்த அதிகாரத்திற்கு எதிராக…
Read more