சிறுகதைகள்

தாண்டவராயன்- என் முதல் சிறுகதை

(1994 விருட்சம் இதழில் வெளியான என் முதல் சிறுகதை இது – ) கடைசியில் மட்டும் சற்று கோணலாக குடைக்கம்பி போல் வளைந்திருக்கும் நெருக்கிக் கோர்த்தார்போல வீடுகள். பாதிக்குமேல் குடிசைகளேயானாலும் முறுக்கித் தெறிக்கும் கம்பிரம். இவையெல்லாம் தாண்டவராயன் தெருவிறகான தனித்துவங்கள் ஆனாலும் அங்கே எப்போதும் நிலவும் தாளஅசைவோடொத்த சில சப்தங்களும் ,கமழும் விதவிதமான வாசனைகளும் வீதிப்…
Read more

மொளக்குச்சி – சிறுகதை ; அஜயன் பாலா

ராஜா நடந்துகொண்டிருந்தான். பழக்கமில்லாத காட்டுப்பாதை தலைக்குமேல் தவழ்ந்த வேலிகாத்தான் கிளையை விரலால் நாசூக்காகப் பற்றித் தூக்கிப் பிடித்தவாறு முன்னாள் செல்லும் வேலுச்சாமியின் பின்னாள் நடந்துகொண்டிருந்தான் இடப்பக்கமாக கிளைகளுக்கு நடுவே முகத்தை மறைத்தபடி ஐந்தாறு பெண்கள் முகத்தை முந்தானையால் மூடியபடி இவன் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தனர். .கோடையின் வெம்மை உடல் முழுக்க பிசுபிசுப்பாக்கியிருந்தது. தொலைவில் எங்கோ கொட்டடிkகும் சத்தம்…
Read more

பிறவி – சிறுகதை அஜயன் பாலா

பிறவி – சிறுகதை அஜயன் பாலா ”சாரா இங்க வாயேன்” ” சொல்லுங்க அடுப்படியில வேலை இருக்கு…” ” டிவில பாரேன் பாப்பா நம்ம மஞ்சு ஜாடையிலயே இருக்கு” ” உங்களுக்கு எப்பவும் இதே வேலைதான்” அவசரமாக டிவி ஹாலுக்கு வந்த சாரா கணவன் அமர்ந்திருந்த சோபாவின் அருகே வந்து நின்று டிவியை பார்த்து ஆச்சரியப்பட்டாள்….
Read more

ஃபர்முடா முக்கோண இதயமும் ராசி டீ ஷர்ட்டும் ஒரு காதல் கதை – சிறுகதை-அஜயன் பாலா

இன்பாக்ஸில் மெசேஜை இன்னொருமுறை பார்த்தான் . ப்ரொபைல் போட்டோவில் விராட் கோலியின் முகத்தை வைத்திருந்ததால் சட்டென அவனால் நவாஸின் ஐடி என்பதை ஊகிக்க முடியவில்லை அடிக்கடி அந்த பெயரை நோட்டிபிகேஷனில் பார்த்தபோது வேறு யாரோ ஒரு நவாஸுதீனாகத்தான் இருக்கும் என நினைத்தான் . ப்ரொபைலுக்கு சென்று போட்டோக்களை பார்த்தான் . வசுமதியின் போட்டோ ஒன்று கூட…
Read more

நீதியின் மரணம் அல்லது மஞ்சள் லாரி வினோத கொலை வழக்கு

இன்று இறுதி நாள் . லாரியா அல்லது நீதிமன்றமா ஜெயிக்கப்போவது  யார் என இது நாள் வரையிலாக நடந்து வந்த  போட்டியின் இறுதி தீர்ப்பு நாள். அதற்கான பரபரப்பு காலையிலிருந்தே  கோர்ட்  வாசலில் துவங்கி விட்டிருந்தது.  லாரியை அப்புறப்படுத்த  கோர்ட் காம்பவுண்ட்டை ஒட்டிய சாலையில் பெரும் கூட்டம்.  கையில் கடப்பாறை சம்மட்டி சகிதம்  லாரியைச் சுற்றி…
Read more

இரண்டாம் வெளி – சற்றே நீண்ட சிறுகதை

இரண்டாம் வெளி – சற்றே நீண்ட சிறுகதை 1. எதிலுமே  காரண காரியத்தை,அடிப்படையாகக் கொண்டு இயங்குபவன் நான். அது ஒரு மனப் பிரச்சனை  என்று கூட கருதலாம். உதாரணத்திற்கு இப்போது என் மனதில் திடுமென பழைய பாடல் தானாக தோன்றினால் ஒரு பேச்சுக்கு  ரோஜா மலரே ராஜ குமாரி என வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த பாடல் எப்படி…
Read more