இலக்கியம்

ஒரு கொரோனா நாளின் பகல் தூக்கம் – சிறுகதை

தனிமையின் வெறுப்பு வீட்டில் அரித்துத் தின்னத்தொடங்கியது. உடனே விடுதலை வேண்டும் . எதன் பொருட்டவாது கடற்கரைக்காற்றை உடனே உடலைத் தழுவச்செய்யவேண்டும். . கொரானாவில் இறந்த மருத்துவரின் உடல் மாயானத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தது. வேறு சேனலில் காலியான தெருக்களின் புகைப்படங்கள் அடிக்கடி காட்டப்பட்டது தலையில் பாத்திரங்கள் சுமந்தபடி கூட்டமாக நெடுஞ்சாலைகளில் குடும்பங்கள் நடக்கின்றன. . முககவசம் அணிந்த…
Read more

தாண்டவராயன்- என் முதல் சிறுகதை

(1994 விருட்சம் இதழில் வெளியான என் முதல் சிறுகதை இது – ) கடைசியில் மட்டும் சற்று கோணலாக குடைக்கம்பி போல் வளைந்திருக்கும் நெருக்கிக் கோர்த்தார்போல வீடுகள். பாதிக்குமேல் குடிசைகளேயானாலும் முறுக்கித் தெறிக்கும் கம்பிரம். இவையெல்லாம் தாண்டவராயன் தெருவிறகான தனித்துவங்கள் ஆனாலும் அங்கே எப்போதும் நிலவும் தாளஅசைவோடொத்த சில சப்தங்களும் ,கமழும் விதவிதமான வாசனைகளும் வீதிப்…
Read more

என் முதல் சிறுகதை பிரசுர வலி – கட்டுரை

சிறுகதைகளை பொறுத்தவரை நான் எழுதியதை தலையில் சுமப்பதேஇல்லை. இதுவரை எந்த சிறுகதையையும் நானாக பிரசுரத்துக்கு பத்ரிக்கை களுக்காக அனுப்பியதும் இல்லை . யாராவது கேட்டு அல்லது யாராவது வாசித்துவிட்டு அவர்களாக கொண்டுபோய் இதழ்களுக்கு கொடுத்ததுதான் இது வரை நடந்துள்ளது. என் ஆரம்பகால கதைகள் அனைத்தும் அப்படித்தான் பிரசுரமாயின. பிற்பாடு யாராவது கேட்டால் மட்டும் எழுதி வைத்திருக்கும்…
Read more

பாதங்களின் பாரதம் – லாக்டவுன் கவிதை

பாதங்கள் பலவகைமஞ்சளாய் வெளுப்பாய் சில கறுத்தும் கூட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள்பித்த வெடிப்பில் தோல்கள் பிய்ந்து ஆணியேறி கரடு பிடித்து ‘காப்பு ஏறி உழைக்கும் பாதங்கள் வலி தாங்கிகள் ‘பல்லுடல் தாங்கும் பெண்ணின் பாதங்கள் பேரன்பை போதிப்பவை தலைச்சுமை தாங்கும் ஆணின் பாதங்கள் உளச்சுமையும் தாங்கும் ஆற்றல் மிக்கவைஇந்த பாதங்கள் பொற்பாதங்கள் தேசத்தின் பேரிடர்…
Read more

சதாத் ஹசன் மாண்டோ & புதுமைப்பித்தன் ஆச்சர்யமான ஒற்றுமைகள்

இரண்டு வருடத்துக்கு முன் மாண்டோ படம் முதல் நாள் முதல் காட்சி பலோசோவில் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்து டைட்டில்கள் ஸ்கோரோலிங் மேலே உயர என் கண்ணீர் கன்னத்தில் உருண்டுகொண்டிருந்தது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்து நிம்மதியற்றுப்போன இரவு அது. படம் பார்த்த பாதிப்பு என்னைபோல அனைவருக்கும் இருந்திருக்காது போல . எல்லோரும் சாவகாசாமாக…
Read more

மொளக்குச்சி – சிறுகதை ; அஜயன் பாலா

ராஜா நடந்துகொண்டிருந்தான். பழக்கமில்லாத காட்டுப்பாதை தலைக்குமேல் தவழ்ந்த வேலிகாத்தான் கிளையை விரலால் நாசூக்காகப் பற்றித் தூக்கிப் பிடித்தவாறு முன்னாள் செல்லும் வேலுச்சாமியின் பின்னாள் நடந்துகொண்டிருந்தான் இடப்பக்கமாக கிளைகளுக்கு நடுவே முகத்தை மறைத்தபடி ஐந்தாறு பெண்கள் முகத்தை முந்தானையால் மூடியபடி இவன் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தனர். .கோடையின் வெம்மை உடல் முழுக்க பிசுபிசுப்பாக்கியிருந்தது. தொலைவில் எங்கோ கொட்டடிkகும் சத்தம்…
Read more