Author Archive: ajayan bala

ஒரு நண்பனின் கதை -1

நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம் ஜூலை 12 கடந்த நான்கு வருடங்களாக இந்த நாளை கடக்கும் போதெல்லாம் நண்பா உன்னைப்பற்றி ஏதாவது எழுத நினைப்பேன் .ஆனால் ஒவ்வொருமுறையும் தோற்றுப்போவேன் 18 வருடமாய் வளர்ந்த நட்பில் எதைச்சொல்வது எதை விடுவது . எந்த சம்பவத்தைத்தொட்டாலும் நீரலையாய் நினைவுகள் எங்கெங்கோ அழைத்துச்செல்கிறதே .எதைச்சொல்ல எதை விடுக்க ……..உன்னைப்பற்றி…
Read more

மிர்ச்சி மசாலா 1986 இயக்குனர் : கேதன் மேத்தா -இந்திய சினிமாவின் பொற்காலம் : 27. பேர்லல் சினிமா அலை;

கூடுதல் அழகியலோடு அதே சமயம் கள எதார்த்தத்தை சற்றும் நழுவாமல் உருவாக்கம் கொண்ட மற்றுமொரு பேர்லல் சினிமா மிர்ச்சி மசாலா நாயகியான ஸ்மீதாபட்டிலூக்கு வசனம் ஒட்டுமொத்த படத்திலும் பத்து வரிகள் மட்டுமே ஆனால் இந்த படத்தில் வெறும் கூர்மையன பார்வையால் தன் கோபத்தை நம் மனதுக்குள் கத்தியாக இறக்கி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.மாபூமி போல…
Read more

ஒரு கொரோனா நாளின் பகல் தூக்கம் – சிறுகதை

தனிமையின் வெறுப்பு வீட்டில் அரித்துத் தின்னத்தொடங்கியது. உடனே விடுதலை வேண்டும் . எதன் பொருட்டவாது கடற்கரைக்காற்றை உடனே உடலைத் தழுவச்செய்யவேண்டும். . கொரானாவில் இறந்த மருத்துவரின் உடல் மாயானத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தது. வேறு சேனலில் காலியான தெருக்களின் புகைப்படங்கள் அடிக்கடி காட்டப்பட்டது தலையில் பாத்திரங்கள் சுமந்தபடி கூட்டமாக நெடுஞ்சாலைகளில் குடும்பங்கள் நடக்கின்றன. . முககவசம் அணிந்த…
Read more

ரெய்னர் வெர்னர் பாஸ் பைண்டர்

இருட்டு அழுக்கு வியர்வை கொஞ்சம் கலை- இரண்டாம் உலகப்போருக்குப் பின் குற்றவுணர்ச்சியாலும் அவமானத்தாலும் தலைகவிழ்ந்து கிடந்த ஜெர்மானியர்களுக்கு கலையும் சினிமாவும் இரண்டாவதாக தள்ளப்படட்தில் வியப்பேதும் இல்லை.இச்சூழலில் அவர்களது மனோநிலையை சித்தரிக்கவும் உள்முகமான சில தர்க்க உடைப்புகளை நிகழ்த்தவும் ,சுய விசாரணையை மேற்கொள்ளவும் அவர்களுக்கு ஒரு தேவை இருந்தது. புனிதம் ஒழுக்கம் எனும் பெயரில் குடும்பங்களில் கட்டப்படும்…
Read more

தாண்டவராயன்- என் முதல் சிறுகதை

(1994 விருட்சம் இதழில் வெளியான என் முதல் சிறுகதை இது – ) கடைசியில் மட்டும் சற்று கோணலாக குடைக்கம்பி போல் வளைந்திருக்கும் நெருக்கிக் கோர்த்தார்போல வீடுகள். பாதிக்குமேல் குடிசைகளேயானாலும் முறுக்கித் தெறிக்கும் கம்பிரம். இவையெல்லாம் தாண்டவராயன் தெருவிறகான தனித்துவங்கள் ஆனாலும் அங்கே எப்போதும் நிலவும் தாளஅசைவோடொத்த சில சப்தங்களும் ,கமழும் விதவிதமான வாசனைகளும் வீதிப்…
Read more

என் முதல் சிறுகதை பிரசுர வலி – கட்டுரை

சிறுகதைகளை பொறுத்தவரை நான் எழுதியதை தலையில் சுமப்பதேஇல்லை. இதுவரை எந்த சிறுகதையையும் நானாக பிரசுரத்துக்கு பத்ரிக்கை களுக்காக அனுப்பியதும் இல்லை . யாராவது கேட்டு அல்லது யாராவது வாசித்துவிட்டு அவர்களாக கொண்டுபோய் இதழ்களுக்கு கொடுத்ததுதான் இது வரை நடந்துள்ளது. என் ஆரம்பகால கதைகள் அனைத்தும் அப்படித்தான் பிரசுரமாயின. பிற்பாடு யாராவது கேட்டால் மட்டும் எழுதி வைத்திருக்கும்…
Read more