மிர்ச்சி மசாலா 1986 இயக்குனர் : கேதன் மேத்தா -இந்திய சினிமாவின் பொற்காலம் : 27. பேர்லல் சினிமா அலை;

கூடுதல் அழகியலோடு அதே சமயம் கள எதார்த்தத்தை சற்றும் நழுவாமல் உருவாக்கம் கொண்ட மற்றுமொரு பேர்லல் சினிமா மிர்ச்சி மசாலா
நாயகியான ஸ்மீதாபட்டிலூக்கு வசனம் ஒட்டுமொத்த படத்திலும் பத்து வரிகள் மட்டுமே ஆனால் இந்த படத்தில் வெறும் கூர்மையன பார்வையால் தன் கோபத்தை நம் மனதுக்குள் கத்தியாக இறக்கி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.
மாபூமி போல இதுவும் பிரிடிஷ் ஆட்சிகால ஒடுக்குமுறையை விவரிக்கும் படம் . மிளகாய் உற்பத்திசெய்யும் சிறிய தொழிற்சாலையை ஒட்டிய ராஜஸ்தானின் சிறிய கிராமம் தான் கதைக்களம் படிப்பறிவில்லாத கிராமத்து ஆண்களும் அவர்களால் அடிமையாக நடத்தப்படும் பெண்களும் கொண்ட பிற்போக்கு கிராமம் . இந்த கிராம்த்துக்கு பிரிட்டிஷ் கைக்கூலியாக் வரி வசூல் செய்யும் சபேதராக தன் படைபரிவாரங்களுடன் வருகிறார் நஸ்ரூதீன் ஷா அங்கேயே முகாமிட்டு வரிகொடுக்காத மக்களை அடித்து துன்புறுத்துவதும் கிராமத்துக்குள் குதிரைகளுடன் திடீரென புகுந்து ஆடு கோழிகளை சூறையாடுவது,ம் இஷ்டப்பட்ட பெண்களை தூக்கிச்சென்று இச்சைக்குள்ளாக்குவதும் அவரது வாடிக்கை
அது போல ஒரு நாள் கிராமத்து பெண்கள் நெடுந்தொலைவு நடந்து நீர் எடுக்க கும்பலாக நடந்து வர அங்கே அவர்களைக் கண்டதும் அனைவரும் பயந்து ஓடுகின்றனர் . ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் அங்குலம் கூட அசையாமல் அப்படியே தனியாக தன் முன் குதிரையில் வந்து நிற்கும் சபேதாரை பார்க்கிறார் . அவள் பெயர் சம்பாலா ( ஸ்மித பட்டீல் ) அவளது நிதானமும் உறுதியும் சபேதாருக்கு பிடித்துபோக அவளிடம் வெறும் தண்னீர் மட்டும் கேட்டு வாங்கி குடித்துவிட்டு போகிறார் .
அப்போதைக்கு அவர் ஒன்றும் செய்யவில்லையே தவிர. சம்பாலாவை எப்படியும் அடைந்துவிடும் எண்ணம் அவரிடம் உறுதியாய் படிந்துவிட்டது .
இதனிடையே கிராமத்துக்கு தலைவனாக இருக்கும் முகில் ( சுரேஷ் ஓபராய் ) எப்படியாவது சபேதாரை சமாளித்து ஊரைவிட்டு அனுப்பிவிட்டால் தலைவலி தீர்ந்துவிடும் என நினைக்கிறான் அது போல ஊரில் உள்ள ஆணகள் பலரும் சபேதார் வைத்திருக்கும் கிராமஃபோன் பெட்டியில் பாட்டுகேட்பதும் அவர் பேச்சை தேவ வாக்காக ஏற்று நடப்பதும் வாடிக்கை .
பெண்களை படிக்கவிடாமல் அடிமையாக வைத்திருக்கும் அக்கிராமத்து ஆண்கள் சபேதார் ஆட்கள் தேவைகேற்ப கிராம்த்து பெண்களை அனுப்பிவைப்பதும் இன்னொரு அவலம் . ஊரில் அனைவரையும் கட்டுப்படுத்தும் கிராமத்து தலைவன் முகிலே கூட தன் மனைவியை சபேதாருக்கு இச்சையாக்க அவனே அழைத்து வருகிறான்
இப்படியான பிற்போக்கான ஆண்கள் நிறைந்த ஆண்கள் மத்தியில் ஒரே ஆண் மட்டும் வீரனாக இருக்கிறார் . அவர் மிளகாய் தொழிற்கூடத்தின் காவலாளியாக பணிசெய்யும் வயதான கிழவன் அபு மான் ( ஓம்புரி )
இந் நிலையில் ஒருநாள் தண்ணீர் எடுக்கப் போன இடத்தில் சம்பாலாவை சபேதார் பார்த்துவிடுகிறான் . அவளை மடக்கி தன் இச்சைக்கு இணங்குமாறு மிரட்ட அவளோ அவனை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து கிராமத்துக்கு ஓடி வருகிறாள் உடனே அவளைப் பிடித்து தூக்கி வர சபேதார் காவலாட்களுக்கு ஆணையிட குதிரைகள் கிராம்த்துக்குள் அதிரடியாய் நுழைகின்றன அதற்குள் சம்பாலா தான் வேலைசெய்யும் தொழிRசாலைக்குள் நுழைய வாட்ச்மேன் அபுமான் விவரமறிந்து வாசலை அடைத்து விடுகிறான் . உறுதியான மதில் சுவருடன் கூடிய அந்த கூடத்துக்குள் நுழைய முடியமால் காவலாட்கள் த்டுமாறுகின்ற்னர்
இதனிடையே கிராமத்து ஆட்களிடம் காவலாட்கள் பேச்சு நடத்துகின்ற்னர் . தலைவர் முகில் உடனே சபேதாரிடம் ஓடி மன்னிப்பு கேட்டு எப்படியாவது சமாதானம் பண்ணி அவளை அழைத்து வருவதாக சொல்கிறார் . அவரும் கிராமத்து ஆட்களும் வந்து அனுப்பு,ம் படி கேட்க உள்ளே இருக்கும் பெண்கள் துவக்கத்தில் கூட்டாக மறுத்து விடுகின்ற்னர்
கிராமத்து ஆண்கள் ஒன்றாக சேர்ந்து சபேதார் நம் எல்லோரையும் அழித்து விடுவார் ஒரு பெண்னை அனுப்பினால் நம் குழந்தைகள் குடும்பங்கள் அனைவரும் காப்பற்றப்படுவோம் என கெஞ்ச ஒரு கட்டத்தில் உள்ளே இருக்கும் பெண்கள் வேறு வழியில்லாமல் சம்பாலாவை ஒருமுறை சபேதாரின் இச்சைக்கு இணங்கி நடந்துகொண்டால் பிர்ச்னை முடிந்துவிடும் என அறிவுறுத்துகின்ற்னர் . அவள் அதற்கு சம்மதிக்க ,மறுக்க அனைவரும் அவளை ஒப்படைக்கும் முடிவுக்கு வருகின்றனர் . ஆனால் காவலாளி அபுமான் மட்டும் மறுத்துவிடுகிறான் . உயிர் போனாலும் சம்பாலாவை அனுப்ப முடியாது என உறுதியாகச் சொல்கிறான் . இறுதியில் சபேதார் ஆட்கள் துப்பாக்கி சகிதம் கதவை உடைக்க முயல அபுமான் துளை வழியே துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட ஒருவன் செத்துப்போக உடனே கும்பலாய் அவர்கள் பதில் தாக்குதல் தொடுக்க அதில் காவலாளி அபுமான் மரித்துப்போகிறான் .
இறுதியில் சபேதார் ஆவேசத்துடன் கதவை உடைத்துக்கொண்டு தொழிற்கூடத்துள் நுழைய பெண்கள் கூட்டம் மிளகாய் பொடியை துணியில் நிரப்பி ஓடி வந்து அவன் முகத்தில் மாறி மாறி வீச அவன் எரிச்சல் தாளாமால் அலற அனைவரும் அவனை தாக்கி கொல்வதுடன் படம் முடிகிரது
இயக்குனர் கேத்தன் மேத்தா வுக்கு இது மூன்றாவது திரைப்படம் . ஏனைய பெரும்பான்மை பேர்லல் சினிமா இயக்குனர்கள் போல இவரும் புனே திரைப்படக் கல்லூரி மாணவர் . படத்தில் நஸ்ருதீன் ஷா ஸ்மிதா பட்டீல் ஓம்புரி மூவரின் நடிப்பு படத்தின் கூடுதல் சிறப்பு . ஒளிப்பதிவாளர் ஜகாங்கீர் சவுத்ரியின் ஒளிப்பதிவு சிற்பியின் துல்லிய,ம் ஒத்த கட்டமைவுகள் படத்துக்கு கூடுதல் பலம் கதையை உயிரூட்டமாய் கண்முன் நிறுத்தும் கிராமத்து வீடுகளும் புற நிலவியலும் அதற்கேற்ப கலை இயக்குனரின் கைவண்ணம் மற்றும் ஆடைகளின் தேர்வும் என அனைத்திலும் சிறந்து விளங்கியது இப் படத்தின் கூடுதல் சிறப்பு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *