ஒரு கொரோனா நாளின் பகல் தூக்கம் – சிறுகதை


தனிமையின் வெறுப்பு வீட்டில் அரித்துத் தின்னத்தொடங்கியது. உடனே விடுதலை வேண்டும் . எதன் பொருட்டவாது கடற்கரைக்காற்றை உடனே உடலைத் தழுவச்செய்யவேண்டும். . கொரானாவில் இறந்த மருத்துவரின் உடல் மாயானத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தது. வேறு சேனலில் காலியான தெருக்களின் புகைப்படங்கள் அடிக்கடி காட்டப்பட்டது தலையில் பாத்திரங்கள் சுமந்தபடி கூட்டமாக நெடுஞ்சாலைகளில் குடும்பங்கள் நடக்கின்றன. . முககவசம் அணிந்த மந்திரிகள் இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதை கூறி மகிழ்ச்சியடைகின்றனர். செய்தி சேனலையும் அரசின் உத்தரவுகளையும் நிறுத்தினான்
மயானம் போல நீண்டு கிடந்த வீதியின் நடுவே ஒரு நாய் ,மட்டும் ஓடிக்கொண்டிருக்க இருபக்கமும் மௌனித்த வீடுகள் . . கடந்த ஒரு வாரமாக இயங்காமல் போனதால் உதைத்து உதைத்து வண்டியை முடுக்கினான். பிரதான சா;லை அப்படியில்லை . கொஞ்சமாக வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்த்னர் . சிக்னலில் ஒரு போலீஸ்காரர் இவனை பார்த்துவிட்டு மெல்ல அருகில் வந்தார். அவனிடம் ரகசியமாக முகக்கவசம் அணியவில்லை ஏன் என காதருகே கேட்டார் . இவன் அமைதியாக் இருந்தான் . சிரித்தபடி நகர்ந்து சென்றார் . கொஞ்ச தூரம் அவர் நடந்து சென்று சற்று தொ;லைவில் ஒரு ஜிப் அருகேசென்று அதி;ல் அமர்ந்துகொண்டிருந்த உயர் அதிகாரியிடம் அவனைப் பார்த்து கை நீட்டி ஏதோ கூறுவது போல இருந்தது இவன் கிக்கரை உதைக்க சிக்னல் இன்னும் மாறாமலிருந்தது. அவர்கள் இருவரும் இவனை நோக்கி நடந்து வர சிக்னல் வாகனங்கள் சீற இவன் ஸ்கூட்ட்ரை அவசரஅவசரமாக முடுக்கி அங்கிருந்து புறப்பட்டான் .. அவன் தன் உலகத்தை இழ்ந்துவிட்டான் நம்பிக்கையும் அறுந்து விட்டது .. வேலை இனி உறுதியில்லை என தெரிந்துவிட்டது . அதுதான் அவன் முக்கியப்ர்ச்னை. அவன் எதிரே கடப்பது கடன் கொடுத்த வங்கி மேலாளர் போல இருந்தது . எதிரே சென்று வண்டியை நிறுத்திய போது அவர் சிகரட் பிடிக்கும் எழுத்தாளராக இருந்தார். அட வெளியே வர ஆம்பிச்சாச்சா .. வாங்க ஒரு சிகரட் பிடிக்கலாம் என அழைத்தார் . அவரது இறுதி ஊர்வலத்திர்கு போனது ஞாபகம் வரவே அவர் முகத்தை பயத்துடன் பார்த்தான் . அவரேதான் வாங்களேன் ஒரு காபி சாப்பிடலாம் என அழைத்தார் . அவனுக்கு எப்போதும் அவரிடம் பேச வார்த்தைகளே இருந்ததில்லை. கவிஞர்களை பார்க்கும் போதெல்லாம் மலரும் பூக்கள் சக எழுத்தாளர்களை கண்டதும் அவனுக்குள் காகிதமாகிவிடுகிறது.
.இப்போது வண்டியை இரு பககமும் பழைய பொருட்கள் விற்கும் கடைவீதிக்குள் செலுத்தினான் பின் ஒரு வீட்டு முன் அவன் வாகனம் நின்றது. ஏன் அங்கு நிறுத்தினான் எதற்கு அந்த வீட்டுக்குள் நுழைகிறான் என யோசித்தான் . சட்டென மறதி. . சீமை ஓடுகள் போட்ட 19ம் நூற்றாண்டு வீடு . .பல அறைகள் கொண்ட பெரிய வீடு .. உள்ளே போய்க்கொண்டே இருக்கிறான் யாருமில்லை ஒவ்வொரு அறை முன்பும் வேலைப்பாடு மிகுந்த கதவுகள் . திறந்து திறந்து பார்க்கிறான். . யாருமில்லை . ஒருவர் மட்டும் வெறும் பாத்திரத்தோடு வேகமாக வெளியேறிக்கொண்டிருந்தார் . நான் யார் எனக் கேட்பதற்குள் விருட்டென விலகி போய்கொண்டிருந்தார் . அவனுக்கு இப்போது அவனைக்கண்டுபிடிக்கவேண்டும் அதுதான் பிரச்னை . பூமியின் எந்த புள்ளியிலிருந்து இங்கு இந்த கணத்தில் இருக்கிறான் என்பது கூட நினைவில்லை .
இன்னொரு மூடிய கதவை திறக்கிறான் அங்கு பழைய பித்தளை பாத்திரங்கள் பெரிய பெரிய ஆளுயர பாத்திரங்கள் .. இதிகாச கதைகளில் விருந்தில் பயன்படுத்துவது போல கரிபடிந்த அறை முழுவதும் அந்த பாத்திரங்கள் அடுக்கப்பட்டிருந்தன அப்போதுதான் கழுவி விட்டார் போல ஆங்காங்கு தண்ணீர் தேங்கியிருக்க அவன் தன் முகத்தை அதில் பார்த்தபடி கடந்தான் . எங்கிருந்தோ பெண்கள் அழும் சப்தம் எழுந்து சட்டென அடங்கியது .. பக்கத்திலிருந்த ஒரு அறையின் கதவைத்திறக்க அங்கு ஐந்தாறு பெண்கள் ஈரத்தலையை விரித்தபடி வட்டமாக அமர்ந்திருந்தனர் . கண்களில் சோகம் அப்பிகிடந்தது . அவன் சட்டென கதவை சாத்திக்கொண்டான் . பின் எதற்கு இந்த வீட்டூக்குள் வந்தோம் என யோசித்தபடி வெளியேவந்தான் .
அவன் . நிறுத்தி விட்டுப்போன இடத்தில் அவன் ஸ்கூட்டரை காணவில்லை. ஆமாம் நீலநிறம் உறுதிப்படுத்திக்கொண்டு . சுற்றும் முற்றும் பார்த்தான் . அக்கம் பக்கம் எல்லோரும் எதையோ தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார்கள் . அவன் கயிறு திரிப்பவரிடம் சென்று என் ஸ்கூட்ட்ரை பார்த்தீர்களா என்றதும் அவர் என்னுடைய வண்டியும்நீல நிறம் தான் நான் தான் ஒரு வேலைக்கு எடுத்துபோகச்சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன் வேண்டுமனால என் வண்டியை எடுத்துகொள்ளுங்கள் என சற்று தொலைவில் மறைந்திருந்த ஒரு வண்டியை காண்பித்தார். .பாதி மட்டும் தெரிந்த அந்த வண்டி துருப்பிடித்திருந்தது . பால் வாகனங்களில் பயன்படுத்துவது போல ஒரு சிவப்பு நிற கயிறு பின்னிருக்கையில் கட்டப்பட்டிருந்தது . அவனுக்கு அது ஒப்பவில்லை தன் வண்டிதான் வேண்டும் என அவரிடம் திட்டமாக சொல்லிவிட்டான் . இவனும் காத்திருந்தான் அவர் அனுப்பிய ஆள் நெடு நேரம் வரவில்லை . பின் அவர் அவன் வீடு இங்குதான் வாருங்கள் தேடுவோம் என அழைத்துச்சென்றார்.
அது அரசு அதிகாரிகள் அடுக்குமாடிக்குடியிருப்பு. அவன் உள்ளே போகத் தயங்கி வெளியே நின்றுவிட்டான். அவர் மட்டும் உள்ளே சென்று யாரிடமோ என்னவோ விசாரித்துக்கொண்டிருந்தார் . அவன் அங்கிருப்பதை விரும்பவில்லை அவனுக்கு ஸ்கூட்டர் கிடைக்கிறார் போல தெரியவில்லை. நான்கைந்து பெண்கள் குடியிருப்பிலிருந்து வெளியே எங்கேயோ புறப்பட்டார்கள் .. அதில் ஒரு பெண் பார்த்த முகம் போல இருந்தது . நல்ல லட்சணமான முகம் அவனைக் கடக்கும் போது சிரித்தாள் … எப்போ படம் பண்ணப்போறே என்றாள் .அவள் யார் என்ற யோசனையிலே அவன் இருந்தான் . அவன் அவளுக்கு பதில் சிரிக்கவில்லை . பதிலும் சொல்ல முடியவில்லை .எங்கோ பார்த்த முகம். மிக நெருக்கமாக .. யோசித்துகொண்டிருந்தான் . விடை கிடைக்கவில்லை . அவனுக்கு அது தொந்தரவாக இருந்தது . எங்கோ அணுக்கமாக அந்த கண்கள் எதையோ சொல்ல வருவது போல .. யார் அந்த பெண் . தெரியவில்லை
இனி ஸ்கூட்டர் கிடைக்காது என உறுதியாக தெரிந்து விட்ட படியால் வீடு நோக்கி நடக்கத்துவங்கினான் . இரண்டு பக்கமும் வயல்வெளிகொண்ட அந்த சாலையில் நடந்துகொண்டிருந்தான் . ஊருக்கு வெளியே வந்துவிட்டோம் போல என நினைத்துக்கொண்டவனுக்குள் அந்த முகம் நினைவிலாடியது .எப்போதோ சிறு வயதில் இறந்து போன தூரத்து அக்கா உறவு போன்ற முகம் ஏதோ சொல்ல வருவது போல இருந்தது . அப்படியே வழியில் தென்பட்ட குட்டி வாராவதியில் அமர்ந்தான் .அவனுக்கு அழவேண்டும் போலிருந்தது ஆற்றில் கை நழுவிச்செல்லும் சோப்பை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது போலிருந்தது . .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *