என் முதல் சிறுகதை பிரசுர வலி – கட்டுரைசிறுகதைகளை பொறுத்தவரை நான் எழுதியதை தலையில் சுமப்பதேஇல்லை. இதுவரை எந்த சிறுகதையையும் நானாக பிரசுரத்துக்கு பத்ரிக்கை களுக்காக அனுப்பியதும் இல்லை . யாராவது கேட்டு அல்லது யாராவது வாசித்துவிட்டு அவர்களாக கொண்டுபோய் இதழ்களுக்கு கொடுத்ததுதான் இது வரை நடந்துள்ளது. என் ஆரம்பகால கதைகள் அனைத்தும் அப்படித்தான் பிரசுரமாயின. பிற்பாடு யாராவது கேட்டால் மட்டும் எழுதி வைத்திருக்கும் கதைகளை அனுப்பி வைப்பேன் .


இதற்கு என் முதல் சிறுகதை பிரசுரமான அனுபவம் ஒரு முக்கிய காரணம் . என் முதல் கதையை இரண்டு வருடமாக அடித்தும் திருத்தியும் எழுதி இறுதியில் தாண்டவரயான் என தலைப்பு வைத்தேன் . அப்போது நன் அடிக்கடி சந்திக்கும் எழுத்தாளர் . ம. அரங்கநாதனிடம் வாசிக்க கொடுக்க அவரோ அட பிரமாதமா இருக்கு என உசுப்பேத்திவிட்டார் . . முதல் கதை. நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளரின் பாராட்டு. ஜிவ்வென உச்சியில் எதுவோ ஏறிக்கொள்ள உடனே அதை அச்சில் பார்க்கும் ஆவல். தீயாய் பற்றியது .


அப்போது முன்றில் கொஞ்ச நாள் நிறுத்தப் பட்டிருந்தது/. அதனால் வேறு பத்ரிக்கைல வர ட்ரை பண்ணு என அரங்கநாதன் சொல்லிவிட்டார். இக்காலத்தில் . என் அறைக்கு அடிக்கடி வரும் கவிஞர் விக்ரமாதித்யன் அதை படித்துவிட்டு அவர் ”நான் இதை வயல் மோகன் கிட்ட கொடுக்கறேன் . என கையோடு பிரதியை எடுத்துப்போய்விட்டார். அப்போதைக்கு என் வாழ்க்கையின் ஒரே லட்சியமே ஏதாவது ஒரு சிறுபத்ரிக்கையில் என் கதை அச்சேறுவதுதான் . அதுவும் சி.மோகன் . அவர் புதுயுகம் கட்டுரை தான் என் இலக்கிய வாசிப்புக்கு வழிகாட்டியாக இருந்து நூலகங்களில் தவம் கிடைக்க வைத்தது .. அதில் முதல் கதை அச்சேறப்போகிறதா அடடா அடடடா என உள்ளம் ஆர்ப்பரித்தது.


இது நடந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது வயல் பத்ரிக்கை வரவில்லை சரி நாமே நேராக போய் விசாரிப்போம் என மைலாப்பூர் கச்சேரி சந்தில் இருக்கும் அவர் அலுவலகத்துக்கு நடக்க ஆரம்பித்தேன் . அட பிராமதாமா எழுதிட்டீங்க தம்பி என சி மோகன் என்னை உச்சிமுகரும் காட்சி வேறு கற்பனையில் பாடாய் படுத்தியது. . முதல் கதை பிரசுரமாகப்போகும் அவஸ்தை இருக்கே அது சொல்லில் மாளாதது . அந்த சிறிய சந்தில் 5ம் எண் தேடி நடக்க நடக்க திக் … திக்……


ஆனால் அவரோ ஸ்டைலாக சிகர்ட் பிடித்தபடி அப்படியா எங்கிட்ட கொடுத்தேன்னு சொன்னாரா என டிராய்ரை இழுத்து அப்படியும் இப்படியுமாக தேடியவர் …அப்ப இங்கதான் இருக்கும் தம்பி படிச்சாதான் பிரசுரமாவுமா இல்லையான்னு சொல்ல முடியும் என சொல்லி என பொங்கியிருந்த கனவுகளில் தண்னீர் தெளிக்க பொசுக்கென ஆகிவிட்டேன .


இதன் பிறகு கிட்டத்ட்ட பத்து பதினைந்து முறை யாவது சமயம் கிடைக்கும் போதெல்லாம் கச்சேரி சந்து சென்றுி படிச்சுடீங்களாசார் படிசுட்டீங்களா சார் என ஆர்வக்கோளாறு காரண்மாக தொந்தரவு செய்ய அவரோ ஒரு கட்டத்தில் எரிச்சலாகி அப்பா நானே பத்ரிக்கை இன்னும் தயாரவலேன்னு இருக்கேன் இந்தா உன் கதை எடுத்துட்டு ப்போ என திருப்பிக் கொடுத்துவிட்டார் .


அன்று இரவு தூங்க வெகு நேரம் ஆனது . இனி கதை எழுதிவிட்டு எந்த பத்ரிக்கை அலுவலகத்துக்கும் போகவே கூடாது என முடிவெடுத்து விட்டேன் . பிற்பாடு அந்த கதையை விக்ரமாதித்யனே சுப மங்களா பத்ரிக்கைக்கு கொண்டு போய் கொடுத்தார். பின் அங்கும் பல மாதங்கள் உறங்கி அவரே இன்னும் பல பத்ரிக்கைகளுக்கு எடுத்துச் சென்று இறுதியில் விருட்சம் அழகிய சிங்கர் வசம் கொடுத்துவிட்டார் . அவரும் அதை தனக்கு வரும் கட்டுக்கட்டான கதைகளில் ஒன்றாக சொருகி வைத்திருந்தார் . பிற்பாடு எஸ் . ராம்கிருஷ்னனும் கோணங்கியும் விருட்சம் அழகிய சிங்கரை ஏதோ விஷயமாக த்தேடிப்போக அங்கு அவர் கட்டுகட்டாக கதைகளை கொண்டுவந்து அவர்கள் வசம் கொடுத்து இதில் படித்து நீங்களே எது தேறும் என சொல்லுங்கள் என சொல்ல அப்போது அவர்கள் கண்ணில் என் பிரதி பட்டு அகலிகைக்கு சாப் விமோசனம் போல கண் திறந்தது , இந்தா இதை ப்போடு என என் கதையை உருவிக்கொடுத்தனர்.


அக்காலத்தில் கோணங்கி யும் ராமகிருஷ்ணனும் என் பழவந்தாங்கல் அறைக்கு வருவது, அவர்கலிடம் என் கதைகளை படிக்க சொல்லி இம்சிப்ப்பதும் தொடர் செயல் . நானும் அவர்களுக்கு என்னால் ஆன பணிவிடைகள் செய்து ஒரு நல்ல பேரை தக்க வைத்துக்கொண்டேன் .


டே தாண்டடவராயன் சா தேவதாஸ் தெருவை வச்சி கதை எழுதியிருக்கே என கோணங்கி அடிக்கடி சொல்வார் . அதனால த்லைப்பே அவருக்கு வினோதம் . ஒரு முறை என் அறைக்கு அவர்கள் இருவரும் வந்துவிட்டு மறுநாள் அவர்களை ரயிலில் வழியனுப்ப வந்த நான் ஒரு கதை சொல்ல அதைகேட்டு ரயிலை விட்டுவிட்டு நெடுநேரம் அவர்கள் கதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பின் நானும் அவர்களோடு அப்படியே ரயில் ஏறி மூன்று நாட்கள் திட்டமில்லாமல் அவர்களோடு அலைந்து திரிந்தேன். இவையெல்லாம் சேர்ந்துதான் என் கதையை அன்று அவர்கள் தேர்வு செய்ய காரணமாக அமைந்தது .


இப்படியாக என் முதல் கதை தாண்டவராயன் 94 நவம்பர் விருட்சம் இதழில் பிரசுரமாகி என் சிறுகதை வரலாறை துவக்கி வைத்து .


உணமையில் அப்போதே நான் ஐந்து சிறுகதைகளை கதைகளை நோட்டில் எழுதி வைத்துவிட்டிருந்தேன் பிற்பாடு வெளியான முருகேசன் டினோசர் முகம் , பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் தொடுவானம் போன்ற கதைகள் குறிபிட்ட காலத்தில் எழுதியவைதான்


இரண்டாவது கதை முகம் ஏற்கனவே யூமாவாசுகி படித்திருந்த்படியால் அவர் அப்போது கொண்டு வந்த குதிரை வீரன் பயணம் முதல் இதழுக்கு அவராக அந்த க்கதையை கேட்டு வாங்கி பிரசுரம் செய்தார்


அப்போது யூமாவும் நானும் பழவந்தாங்களில் அடுத்தடுத்த தெருக்களில் தங்கியிருந்தோம் . அதன்பிறகு அவர் இருந்த விட்டின் பின்பககமே நானும் குடி வந்தேன் . ஓரிரு வருடங்கள் அவரோடு நெருக்கமாக பழகக்கிடைத்த அக்காலம் மறக்கமுடியாத நினைவுகள் .


குதிரை வீரன் பயணம் வெளியாகி சில மாதங்கள் கழித்து என் கதையை கடுமையாக திட்டி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றை யூமா எனக்கு காட்டினார் . கதையில் நான் எழுதியிருந்த ஒரு இரசாயன வேதிப்பொருள் பெயர் மாறியிருந்தது தான் அந்த கடிதத்தின் சாரம் . அவர் சொன்னது சரி நானும் என் தவறை உணரந்தேன். யூமாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட நான் இனி அடுத்து நான்கு வருடத்துக்கு கதையே எழுதப்போவதில்லை அதுதான் இதற்கு நானெ விதித்துக்கொள்ளும் தண்டனை என கூறினேன் . அது போலவே நான்கு வருடங்கள் நான் எந்த கதையும் எழுதவில்லை . இக்காலத்தில் திரைப் ப்டத்துறையில் உதவி இயக்குனராகா துறைமுக,ம் லவ்டுடே என இரண்டு படங்களில் பணி புரிந்து விட்டிருந்தேன் .


நான்கு வருடங்களுக்குப் பின் 1999ல் இந்தியா டுடே வில் என் அடுத்த கதை பிரசுரமானது , அந்த க் கதை இலக்கியச்சிந்த்னையின் அந்த மாத சிறந்த சிறு கதையாக தேர்வு செயயப் பட்டது மட்டுமன்றி என் இலக்கிய வாழ்வின் ஒரு அடையாளமாகவே எனக்கு பாதை அமைத்துக்கொடுத்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *