தமிழ் சினிமாவில் நாவல்கள்

தமிழ் நாவல்கள் ஏன் சினிமா ஆகவில்லை

பல நாட்களாகவே திரும்ப திரும்ப இந்த கேள்வி எழுப்பப் படுகிறது
ஹாலிவுட் மற்றும் உலகப் படங்களில் நாயகன் என்பவன் கதையின் நாயகன் அவனும் ஒரு கதாபத்திரம் ஆனால் நம் சினிமாக்களில் டைட்டிலில் அவன் கை விரல் காண்பிப்பது துவங்கி ஆர்கசம் தான் இறுதியில் அவன் வெற்ரிபெறுவது வரை அவனையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் தமிழ் படங்களில் நாயகன் பாத்ரூம் போவது மட்டும்தான் காட்டப்படவில்லை .செல்வராகவன் மூலம் சோனியா அகர்வாலுக்குகிடைத்த அந்த பெருமை இன்னும் நாயகர்களுக்கு கிடைக்காதவரை மகிழ்ச்சி .
உதிரிப்பூக்கள் ஏன் தமிழில் சிறந்த படமாக கொண்டாடப்படுகிரது என்றால் அதில் நாயகன் என்ற பாத்திரமே இல்லை வில்லன் தான் மையபாத்திரம் அது போல் அழியாத கோலங்கள் , வீடு சந்தியாராகம் என நாயகன் இல்லாத படம் என்றால் விரல் விட்டு எண்னக்கூஇடிய படங்களே இருக்கின்ற்ன.

பொன்னியின் செல்வன் மிகபெரிய வெற்றி பெற்ற நாவல் ஏன் அதை யாரும் தமிழில் இதுவரை படமாக்கவில்லை . இப்போது மணி ரத்னம் களத்தில் இறங்கியிருக்கிறார். ஆனால் இத்ற்கு முன் முயற்சித்த பலரும் ஏன் பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி விட்டனர்
இதற்கான பதிலை புரிந்து கொண்டால் தமிழ் சினிமா ஏன் நாவலை சினிமாவாக எடுக்க குலை நடுக்கம் கொள்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் .
காரணம் பொன்னியின் செல்வன் சம்பவங்களின் கோர்வை. அதில் மைய நாயகன் என யாரும் இல்லை .மைய நாயகனான அருள் மொழி வர்மனைக்காட்டிலும் கதை முழுக்க சாகசம் செய்பவன் துணை பாத்திரமான வந்தியத்தேவன் தான் . சரி வந்தியத்தேவனை நாயகனாக்கி திரைக்கதை அமைக்கலாமே என்ற கேள்வி வரலாம் .. அத்ற்கு வாய்ப்பே இல்லை கதை முழுக்க ராஜகுடும்ப உட்பகை பற்றியது. துவக்கத்தில் சில காட்சிகள் ஆடலாம் பாடலாம் ஆனால் அத்ற்கு மேல் திரைக்கதையில் அவரை வைத்து ஒன்றும் பண்ண முடியாது
தமிழ் சினிமாவுக்கு ஒரு நாயகன் தேவை அவன் சாகசம் செய்ய வேண்டும் . அப்படி அவன் செய்யும் சாகசம் வீரம் காதல் தியாகம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது பார்வையாளனுக்கு வியப்பையோ பரவசத்தையோ ஆச்ச்ர்யத்தையோ அதிசயத்தையோ கொடுக்கவேண்டும்

இதனால் தான் தமிழ் சினிமா இப்போதும் ஹீரோக்கள் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தத்த்தளிக்கிறது
அறம் பரியேறும் பெருமாள் .அட்டகத்தி அருவி போன்ற படங்கள் வித்திய்சாமாக வந்து வெற்றி பெற்றுள்ளதே என கேட்கலாம
ஆனால் நுட்பமாக பார்த்தால் இந்த அனைத்திலும் ஒரு சாகசம் இருக்கும் . அவர்கள் வழக்காமான் பஞ்ச் டயலாக் பேசாமல் ஆடிபாடாமல் இருக்கலாம் ஆனால் அந்த பாத்திரம் ஒரு சாகசம் செய்து மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பதுதான் இந்த படங்களுக்கு ஓரளவு வெற்றியை கொடுத்திருக்கின்ற்ன .
நாவலில் இது பொன்ற சாகசங்கள் குறைவு . அப்படியே இருந்தாலும் எழுத்தில் என்னதான் ஆடிபாடினாலும் அது ஈர்க்காது . நாவலில் சாக்சம் என்பது நாயகனின் புத்திசாலித்த்னம் அல்லது தியாகம் அவனது உணர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவைதான் வெற்றிபெறும் இதுதான் இரண்டுக்குமான் அடிப்படை வித்யாசம்
மக்களிடையே வெற்றி பெற்ற மோகமுள் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட நாவல்களில் மையமாக பாத்திரம் இருந்தாலும் கதை உணர்ச்சிகரமான சம்பவங்களின் அடிப்படையில் நிகழ்கின்றன .
தமிழில் துப்பறியும் பாக்கட் நாவ்ல்கள் மலையளவு குவிந்துகிடக்கின்ற்ன அதில் முழுக்க முழுக்க ஹீரோவின் சாகசம் தான் . ப்ரியா போல ஒரு சில முயற்சிகள் தவிர பெரும்பாலும் ஏன் அவை நிகழ்வில்லை என்பது ஆச்சர்யம். தமிழ்ர்களுக்கு இது போன்ற துப்பறியும் கதைகளைவிட சமூக்க்கதை பார்ப்பதில் தான் அதிக விருப்பம் . அதே சமயம் அதில் ஹீரோ சாகசமும் செய்யவேண்டும் . இப்போது யோசித்துப்பாருங்கள் எம்ஜி ஆர் ரஜினி படங்களை. அவர்களது வெற்றியின் பார்முலாவே இது தான் ஆரம்பத்தில் ராஜா ராணிகதைகள் எம் ஜி ஆருக்கு வெற்றியைதேடித்தந்தாலும் அறுபதுகள் துவங்கி சமூக வாழ்க்கை படங்களே வெற்ரி பெற்றிருக்கின்ற்ன . ரஜினிக்கும் அப்படித்தான் முரட்டுக்காளை அண்ணாமலை போன்ற சமூக வாழ்க்கை படங்களே அவரை உச்சத்தில் எடுத்துச்சென்றுள்ளன
ஹாலிவுட்டில் கமர்ஷியலாக பெரிய ஹிட் அடித்த ஹாரிபாட்டர் ,லார்ட் ஆபதி ரிங் போன்ற படங்களாகட்டும் காலத்தை வென்ற கிளாசிக்குளான கான் வித் தி விண்ட் , காட்பாதர் மற்றும் சாஷங் ரிடம்ஷன் என எல்லாமே நாவ்லைத்தழுவியே எடுக்கப்பட்டுள்ளன .
காட்பாதர் இயக்குனர் கொப்பல்லொ என் படங்கள் பெரும்பாலும் நாவலில் இருந்தே எடுக்கிறேன் காரணம் அவற்ரில் நம்பகத்த்ன்மையான உலகம் இருக்கிறது .உடை ஆர்ட் டைரக்ஷன் ஒளிப்பதிவு எல்லாமே நாவலில் ஏற்கனவே தீர்மானிக்கப்ப்ட்டுவிடுவதால் என் கற்பனைக்கு வேலை கம்மி என்கிறார் .
சரி தமிழில் இதுவரை சினிமாவாக எடுக்கப்ப்ட்ட நாவல்களை ஒரு சுற்று பார்ப்போம்
தமிழ் சினிமாவின் துவக்க காலத்தில் பல நாவல் முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்ற்ன . இத்த்னைக்கும் மௌன சினிமா விலிருந்து பேசும் சினிமாவகா மாறத்துவங்கிய ஒரு சில வருடங்களிலேயெ இது நிகழ்ந்துவிட்டது சினிமாவாக உருவெடுத்த முதல் நாவல் வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதியது. நாவல் எழுதிய மாடிவீடுகட்டி மகாராஜா வாழ்க்கை வாழ்ந்த தமிழ்ன் முதல் எழுத்தாளர் மேனகா. . 1934ல் வெளியான மெனகா இவர் எழுதிய துப்புறியும் நாவலை அடிப்படையாக் கொண்டுதான் உருவாக்கபட்டது , அவ்வகையில் தமிழ்ல் நாவலான முதல் சினிமா .வடூவார்ருடௌயதுதான்
படம் மிகப்பெரிய வெற்றி . இதை.த்தொடர்ந்து ஜே ஆர் ரங்கராஜு எழுதிய ராஜாம்பாள் சவுக்கடி சந்திரகாந்தா மற்றும் வை. மு கோதை நாயகி எழுதிய ராஜ் மோகன் அனாதைப்பெண் போன்ற நாவலகள் படமாக உயிர்பெற்ற்ன \\\
\இந்த வரிசையில் கலகி எழுதிய தியாகபூமி மிகப்பெரிய வெற்றிப்ப்டம் . ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பின் 1939ல் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தொடர்ந்து கள்வனின் காதலி ,மரகதம் , தில்லானா மோகானாம்பள் என ஒரு சில முயற்சிகள் தமிழ்ல் நிகழ்ந்தாலும் தொடர்ந்து அது என்னகாரணத்தாலோ நீடிக்கவில்லை மாறாக குறைந்து நாயகதுதி படங்கள் அதிகமானது
நீண்ட இடைவெளிக்குப்பின் ஜெய்காந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் , சுஜாதாவின் ப்ரியா கரையெல்லம் செண்பகப்பூ போன்ற்வை நாவலாக உருவெடுத்தன
ப்ரியா நாயகனின் சாகச படம் என்பதால் வெற்றிபெற்றது இக்காலத்தில் மகேந்திரன் நாவ்ல்களை தழுவி உதிரிப்பூக்கள் முள்லும் மலரும் இரண்டு படங்களை எடுத்தார் . வணிக ரீதியகவும் விமர்சன ரீதியகாவுய்ம் இப்படங்கள் வெற்றி பெற்ற பின்னாலும் யாரும் இதை திடரவில்லை
மோகமுள் நாவல் அதே பெயரில் சினிமாவக எடுக்கப்ப்ட்டு சென்னையில் மட்டும் 100 நாட்கள் ஓடியது பின்
நீண்ட இடைவெளிக்குப்பின் 2000த்துக்குபின் தான் நாஞ்சில் நாடனின் த்லைகீழ் வ்கிதங்கள் தங்கர்ப்பாச்சான் மூலம் சொல்லமறந்த கதையாக எடுக்கப்ப்ட்டது
பரதேசி மூலம் பாலா விசாரணை மூலம் வெற்றிமாறன் ஆகியோர் இந்த பாதையை தொடர்ந்து வந்தாலும் மிகப்பெரிய வணிக வெற்றி என்பது பூமணியின் வெக்கை ந்ஃஆவலை தழுவி எடுக்கப்ப்ட்ட அசுரன் மூலமாக மட்டுமே சாத்திய்பட்டது
அவ்வகையில் வணிக ரீதியாக வெற்றிபெற்ற ம்ழுமையன படங்கள் என்று பார்த்தால் அழியாத கோலங்கள் மற்றும் அசுரன் இரண்டுமட்டுமே சொல்ல முடியும்
இந்த இரண்டுக்கும் ஒற்றுமை இரண்டு மே தழுவி எடுக்கப்ப்ட்டவை
முழுமையாக நாவலை அடியொற்றி எடுக்கப் பட்டால் இவையிரண்டும் கல்லாகட்டியிருக்குமா என்பது சந்தெகமே
– அஜயன் பாலா
நன்றி : கல்கி வார இதழ்

?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *