நடிப்புக்கலை

நம் உடலின் அசைவை மனமே தீர்மானிக்கிரது.
நடிப்பின் கலையும் அப்படியே மனம் பாத்திரத்தை உள்வாங்கி உடல் மூலம் வெளிப்படுத்துகிறது
.இது தன்னிச்சையான செயல் . ஆனால் அது எப்படி வெளிப்படுகிறது அதில் அழகு கலையுனர்ச்சி எவ்வளவு பிரதிபலிக்கிறது
என்பதில்தான் நடிப்பின் கலை ஒளிந்திருக்கிறது .

பலரும் எண்ணத்திலிருந்து அல்லது கற்பனையிலிருந்து நேரடியாக உடலை இயக்குவதே நடிப்பு என தவறாக உணர்ந்திருக்கின்றனர்
அது வெறும் எண்ணத்தின் பிரதிபலிப்பு மட்டுமே .ஆனால் நடிப்பு எனும் கலை வெறுமே எண்ணங்களின் அல்லது கற்பனையின் பிரதிபலிப்பு மட்டுமே அல்ல

உதாரணத்திற்கு ஒரு குடிகாரன் பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள் ஒவ்வொருவரும் பலவாறாக நடிப்பார்கள்
அது அவர்கள் பார்த்த உணர்ந்த குடிகாரனின் பிரதிபலிப்பு
இந்த பிரதிபலிப்பு நடிப்பின் கலை இல்லை
நடிப்பின் கலையை முழுமையாக உணர்ந்த ஒருவன் அந்த பாத்திரத்தை ரசிக்கும்படி உருவாக்குகிறான் .
நடிப்பு என்பது உணர்வுகளை அப்படியே வெளியே கொட்டுவது அவன் நடிப்பில் தவிர்க்கப்படும்
காரனமில்லாமல் அவனது விரலின்நுனி கூட அசையாது . அதே சமயம் அவனை நீங்கள் உணர்வு பூர்வமாக உள் வாங்கத்துவங்குகிறீர்கள்
ஒரு நல்ல் இசையை கேக்கும்போது உண்டாகும் மன நிலை போலத்தான் நல்ல நடிப்பும் உங்களை ரசிக்க வைக்கும்

இந்த வகை நடிப்புக்குப்பின் மனதின் கட்டளைக்கும், உடலின் பிரதிபலிக்கும் நடுவே ஒரு வெளி இருக்கிறது
காட்டாற்றை கட்டுப்படுத்தி தேவைக்கேற்ப கால்வாய்களுக்கு அனுமதிக்கும் அணைக்கட்டு போல
அதற்கு கடும் பயிற்சி தேவைப்படுகிறது
மனதும் உடலும் ஒரு சமமான புள்ளிக்கு கொண்டு வந்து அங்கிருந்து முழுமையான பயிற்சிக்குபின்பே அந்த ஆற்றலை நம்மால் கண்டடைய முடியும்
அது உடனே வராது
வாழ்க்கை மூழுக்க இதை கலையாக கற்றுக்கொண்ட சிறந்த ஆசிரியர் கொடுக்கும் தீவிர பயிர்சிகளின் மூலமே அதைக் கண்டைடைய முடியும்
நடிக நிலம்
அதற்காக உருவாக்கப்பட்டது இது யோகா தியானம், நடிப்பின் பயிற்சி ,சினிமா தொழில் நுட்பம் மற்றும் சிலம்பம், தேவராட்டம் , பறையிசை ,தாய்ச்சி போன்ற பயிற்சிபட்டறைகள் என பல்வேறு வகுப்புகளாக பிரிக்கப்பட்டு தகுந்த ஆசிரியர்கள் மூலம் ஒழுங்கும் செய்ய்ப்பட்டுள்ளன்
அதன் தலைமை ஆசிரியர் உபேந்திரா இந்தியாவின் பலவேறு பார்ம்பர்ய கலைகள் வழி உருவாக்கம் பெற்றவர் . கர்நாடகத்தில் புகழ்பெற்ற கலைக்கூடம் நினாசம் மற்றும் கேரளாவின் கலா மண்டலி பயிற்சி எடுத்துக்கொண்டவர் .அதோடு நடிப்பின் நுணுக்கங்களை முறையாக கற்ற்வர் டெல்லி தேசிய நாடக் ப்பள்ளியின்முன்னாள் பயிற்சியாளர் . தென்னிந்தியாவில் பல்வேறு நாடகக்குழுக்களில் பணியாறியவ்ர்
அவரோடு எழுத்தாலரும் இயக்குனருமான அஜயன் பாலா மற்றும் கூத்துப்பட்டரையின் முன்னால் மானவர் ராஜன் ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடிப்பு வகுப்புகளை ஒழுங்கு செய்துள்ள்னர்
மற்றும் திரைப்பட நடிகரும் சென்னைதிரைப்ப்டக்கலூரியின் முன்னாள் மாணவருமான டேனியல் பாலாஜி அவர்கள் கவுரவ ஆசிரியராக நடிக நிலம் பயிற்சிக்கூடத்தில் பங்கேற்கவிருக்கிறார்
மேலும் இவர்களோடு கூத்துப்ப்ட்ட்றையின் முன்னாள் மாணவர்கள் திரைப் ப்டத்துறை சார்ந்த புகழ்பெற்ற நடிகர்கள் இயக்குனர்க:ள் இ8ணை இயக்குனர்கள் பங்கேற்க விருக்கின்ற்னர்
வகுப்புகள் வரா இறுதி நாட்கள் முழு நாள் வகுப்பும் (நான்கு மாதம்)
மற்றும் வார நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணிமுதல் 9 வரை ( மூன்று மாதம் )
என வகுப்புகள் 250 மணிநேரத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன
ஆக்ச்ட் 3 முதல் வரா இறுதி நாட்கள் வகுப்புகள் துவங்குகின்ற்ன
பயிற்சி வகுப்பில் உங்களை உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்
தொடர்புக்கு
பாலுமகேந்திரா நூலகம்
1, திலகர் தெரு
சாலிக்கிராமம்
]சென்னை 93.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *