கண்ணே கலைமானே,

இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் சமூக சேவக நாயகனுக்கும் விவசாயக் கடன்களை வசூலிக்கும் கிரம வங்கி அதிகாரி நாயகிக்கும் மோதல், காதல், கல்யாணம், பிரச்சனைகள்தான் கண்ணே கலைமானே கதை.
நண்பன் சீனு ராமசாமி தங்கர்பச்சானுக்கு பிறகு தொடர்ந்து கிராமத்து சித்திரங்களை இயக்கி வருகிறார். கடைசி பதினைந்து நிமிடத்தில் கதை சொல்வது வித்தியாசமான திரைக்கதை உத்தி. படம் முழுக்க பல கருத்துக்களை விதைத்துக்கொண்டு செல்வதால் படம் ரொம்பவும் நிதானம். மேற்கு தொடர்ச்சி மலை, 96, டூலெட் வரிசையில் வணிக சினிமாவும் மெதுவான நகர்வை கொண்டிருப்பது என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமான மாற்றமே…
இயற்கை விவசாயம் மட்டுமில்லாமல் உறவுகளின் மேன்மை என சமூக விவசாயமும் செய்திருகிறார் சீனு. மென் நாயக பாத்திரத்தில் மனிதன் படத்திற்க்கு பிறகு நடிப்பில் அசத்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன் பாட்டியின் நல்ல உள்ளத்தை அறிய வரும் அந்த காட்சியில் ஒரு முழுமையான நடிகனாக பண்பட்டு நிற்கிறார். மனம் விட்டு அழுவது என்பது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், நடிப்பில் அது முக்கியமான பரிணாமம். விஸ்வாசம் படத்தில் அஜீத்தின் அழுகைக்கு பிறகு உதயநிதியின் அழுகை பிடித்திருந்தது…
அழுத்தமான உணர்வை வெளிப்படுத்தும் தமன்னாவின் கண்களை கண்ணால் ஊடுருவிக்கொண்டே இருக்கலாம் . அத்தனை ஆழம் , அத்தனை அழகு . அந்த கண்ணுக்கு உண்டாகும் பிரச்னை தான் கண்ணே கலைமானே
தொடர்ந்து சமூகத்துக்கு ஆரோக்கியமான படங்களை மட்டுமே தரும் நண்பன் சீனு ராமசாமி தொடர்ந்து இதே பிடிவாதத்துடன் பயணிக்க
வாழ்த்துக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *