டூலெட் எனும் காட்சிமொழி அதிசயம்

இன்று செழியன் இயக்கத்தில் டூலெட் படம் பார்த்தேன்.தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்த்தியான காட்சி மொழிவசப்பட்ட சினிமாவை பார்த்தேன் . எல்லா கலையும் போல சினிமாவும் ஒரு கலை .

ஆனால் இங்கு பலரும் நல்ல கதை எதார்த்தமான காட்சியமைப்பு இதுதான் கலை சினிமா என தவறான புரிதலுடன் இருக்கிறார்கள். 
அதனாலேயே ஹாலிவுட்டின் மூன்றாம் தர கமர்ஷியல் படத்தின் செய் நேர்த்தி கூட நம் தமிழ் சினிமாவுக்கு வாய்க்கவில்லை ..

இந்த படம் மேலோட்டமாக நடுத்தர குடும்பத்தின் வாடகைக்கு வீடு தேடும் ப்ரச்னையை பேசினாலும் அடியோட்டமாக பெரு நகரங்களில் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மனித அவலங்களை தூர நின்று நம்மை வேடிக்கை பார்க்க அனுமதிக்கிறது. மிகை கதையாடல் நாடகீயம் இல்லாமல் பார்வையாளன் உண்ரவுநிலைகேற்ப அனுமதிக்கிறது. . இயக்குனர் நினைத்தால் இதை பல இடங்களில் நம் உணர்ச்சியை கொந்தளிக்க வைத்து கண்ணீரை வரவழைத்திருக்க முடியும் ஆனால் மேன்மையான கலை மனிதனின் மலினமான உணர்ச்சிகளை பயன்படுத்திக் கொள்வதில்லை . என்பதை செழியன் நன்கு அறிவார்.

இந்த படத்தின் இளம் கணவன் மனைவி இருவருக்கும் தனித்தனி ப்ர்சனைகள் . இருவருடைய உணர்ச்சி நிலைகள் வேறு. திரைபடத்துறையினை நம்பி வாழும் நாயகன் கனவுகளை நம்பி வாழ்பவன் ஆனால் மனைவியோ அன்றாடம் எதிர்கொள்ளும் சின்ன சின்ன ப்ர்சனையை க்கூட மிகையாக எதிர்வினை செய்கிறாள் . . வீட்டுகாரம்மாள் சாவி கொடுத்து விட்டுப் போவதைக் கூட அவமானமாக கருதக்கூடியவள் . ஆனால் எத்தனை துயரங்களிலும் தன்னை இழக்காத திட மனிதன் . உண்மையில் அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இன்று ஒவ்வொரு நாளும் ஆயிரக்கனக்கில் நகரங்களில் இளைஞர்கள் அனுபவிக்ககூடியவை. ஒரு அவசரமான காரியத்துக்கு செல்லும் போது பாதி வழியில் வண்டி நின்று போக உண்டாகும் மன நெருக்கடி அனுபவித்தவர்க்கே தெரியும் . .

உண்மையில் சென்னையில் ஒரு வங்கி கணக்கு வாங்க தகுதியான அடையாள அட்டைகளைப் பெறக்கூட பத்து வருடம் நாயாய் பேயாய் அலையவேண்டி வந்தது. கலையை நம்பி வாழ்பவர்கே அந்தக் கஷ்டம் தெரியும் இப் படம் வாட்கை பர்சனையைத் தாண்டி மிக முக்கியமான ப்ரச்னையை பேசுகிறது என்றால் அது ஒரு கலைஞனின் அன்றாட வாழ்வின் அவலம் .

அது போல வாடகைக்கு வீடுகொடுக்ககூட மாத சம்பளம் வேலைசெய்யும் போலியான நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டிய கட்டாயம் தான் இந்த கதையின் முக்கியமான முடிச்சு. . படத்தின் நேர்த்தியான டத்தொகுப்பு காமிரா கட்டமைவு தாண்டி இயக்குனரின் உள்ளுணர்வு தீண்டல்கள் என்னை பெரிதும் ஈர்த்தன.

குறிப்பாக சிறுவன் வரும் காட்சிகள் அனைத்திலும் இயக்குனரின் நுட்பமான அவதானிப்பு கலைத்தீண்டலாக மாறுகிறது . படத்தின் இறுக்கத்தை தளர்த்துவதும் அவனது காட்சிகள் தான் .அவன் வீட்டுச் சுவற்றில் வரைந்த ஓவியங்களை அவனே அழிக்க நேரும் காவிய சோகம் அவற்றில் ஒன்று . வழக்கமான சினிமாக்களில் இக்காட்சிகளில் சிறுவனின் அழுகையைக் காட்டி மலினபடுத்திவிடுவார்கள். அதைச்செய்யாமல் அதை ஏற்றுக்கொண்டு நமக்குள் மெல்லிய சோகத்தை உண்டாக்குவது ஆகச்சிறந்த காட்சியமைப்பு .

கணவன் மனைவியாக நடித்த சந்தோஷ் ஷீலா இருவருமே எதார்த்தமான குணவியல்புகள் மூலம் நடிப்பில் புது பரிணாமத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

சேட்டு தன்னை பற்றி கம்பெனியில் விசாரிக்க போவதாக சொன்னவுடன் வண்டியை தாங்கிக்கொண்டு பதட்டத்துடன் நண்பனுக்கு செல்போனில் பேசும் காட்சியில் பத்ட்டத்தை 
முகத்தில் கடுகலும் காட்டாமல் உடலில் அதுவும் காரணமாக வேகமான சுவாசம் காரணமாக வயிறுமட்டுமே அசையும்படியாக காண்பித்த நுட்பமான உடல் மொழி சாட்சி.

படம் முழுக்க கண்வனை கோபத்தில் தாளிக்க வைத்துவிட்டு வீடு கிடைத்து மகிழ்ச்சியில் கணவனை காதலுடன் உறங்க அழைக்கும் காட்சியில் காண்பிக்கும் முகபாவத்தின் நுணுக்கம் அவரது தேர்ந்த நடிப்புக்குச் சான்று.

இப்படி பார்வையாளனுக்கு படம் முழுக்க நுணுக்கமான சங்கதிகளை உருவாக்கியிருப்பது செழியனின் கலாபூர்வ இயக்கத்துக்கு சான்று படத்தில் வீட்டு ஓனராக வரும் ஆதிராவின் அழுத்தமான் நடிப்பு, குறிப்பிடத்தக்க ஒன்று எழுத்தாளர்கள் அருள் எழிலன் , எம் .கே.மணி, மற்றும் ரவி சுப்ரம்ணியன் ஆகியோர் தத்தம் பாத்திரங்களுக்கு அழகு சேர்த்திருக்கின்றனர்..

படம் வரும் 21ம் தேதி ் திரைக்கு வருகிறது அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள் .. ஒரு கலைஞனின் அரிய முயற்சிக்கு தோள் கொடுங்கள் டூ லெட் ஒரு துவக்கம் இப் படத்துக்கு தாங்கள் கொடுக்கும் ஆதரவு நாளை தமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு அழைத்துச்செல்ல உதவும்

  • கட்டுரை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *